வட கொரிய தேசிய விழாவுக்கான கூட்டத்தில் வாங் ஜீஷான் பங்கெடுப்பு

வான்மதி 2018-09-08 16:10:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரிய தேசிய விழாவுக்கான கூட்டத்தில் வாங் ஜீஷான் பங்கெடுப்பு

சீன மக்கள் வெளிநாட்டு நட்புறவு சங்கம் மற்றும் சீன-வட கொரிய நட்புறவு சங்கம் 7ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் நடத்திய வட கொரியாவின் 70ஆவது தேசிய விழாவுக்கான கொண்டாட்டக் கூட்டத்தில் சீனத் துணை அரசுத் தலைவர் வாங் ஜீஷான் கலந்து கொண்டார்.

கடந்த 70 ஆண்டுகளில் சோஷலிச புரட்சி மற்றும் கட்டுமானத் துறையில் செழிப்பான சாதனைகளப் பெற்றுள்ள வட கொரியாவுக்கு வாங் ஜீஷான் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், சீன-வட கொரிய உறவை வளர்த்து வலுப்படுத்தப் பாடுபடுவதில் சீன கட்சி மற்றும் அரசின் நிலைப்பாடு மாறாது. வட கொரிய மக்கள் மீதான சீன மக்களின் நட்பார்ந்த உணர்வு மாறாது. சோஷலிச வட கொரியாவுக்கான சீனாவின் ஆதரவு தொடரும். வட கொரியாவுடன் இணைந்து, இருநாடுகளின் அதியுயர் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களைச் செயல்படுத்தி, இருநாட்டுறவு மேலும் பெரும் புதிய வளர்ச்சியைப் பெறுவதை முன்னேற்றுவிக்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்