சிறந்த முன்மாதிரியான நட்புறவோடு பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்

மதியழகன் 2018-09-10 18:41:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிறந்த முன்மாதிரியான நட்புறவோடு பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்

சீனாவும் பாகிஸ்தானும், நெடுநோக்குத் தன்மை வாய்ந்த ஒத்துழைப்புக் கூட்டாளியாக விளங்கும்  என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங் சுவாங் திங்கள்கிழமை 10ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது,

கட்சிப் பிரிவுகளின் வேற்றுமை, ஆட்சி மாற்றம் ஆகியற்றைத் தாண்டி இரு தரப்புறவு நிலையாகவே முன்னேறி வருகிறது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டபோது, புதிய அரசின் தலைவர்களுடன் பல பொதுக் கருத்துக்களை உருவாக்கினார். இதனிடையில், நட்பார்ந்த அண்டை நாட்டுறவின் சிறந்த முன்மாதிரியாக இரு நாட்டுறவை உருவாக்கும் வகையில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்