விரைவாக வளர்ந்து வரும் சீனாவின் சேவை வர்த்தகம்

மதியழகன் 2018-09-10 18:43:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சேவைத் துறையின் மொத்த வர்த்தகத் தொகை, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் 2 லட்சத்து 97ஆயிரத்து 540 யுவானாக பதிவானது. இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 9.9 விழுகாடு அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று சீன வணிக அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், உலக வர்த்தகத்திற்கு பாதுகாப்புவாதத் தடை ஏற்பட்ட பின்னணியில், சீனாவின் சேவை வர்த்தகம், கிட்டத்தட்ட 10விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வர்த்தகத் துறையின் புதிய வளரச்சி  வாய்ப்பாகவும், பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தியாகவும் மாறியுள்ள சேவை வர்த்தகம் விரைவாக வளர்ந்து வருவது, சீனா மற்றும் உலகிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலாவதாக, சேவை வர்த்தகத்தின் சீரான வளர்ச்சியால், சேவைத் தொழில்களின் அடிப்படை பலப்படுத்தப்படும். இது, சீனா பொருளாதார அபாயத்தைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தவும்  சேவைத் தொழிற்துறையின் சர்வதேசமயமாக்கலை உயர்த்தவும் உதவும்.

இரண்டாவதாக,  சேவை வர்த்தகத்தை எளிதாக்கும் முறைமையின் ஆக்கப்பணியை சீனா முன்னேற்றும் அனுவபங்கள் கிடைத்துள்ளன. நாடாளவில் இந்த அனுபவங்களைப் பரவலாக்குவதன் மூலம் வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவாக்கும்.

மூன்றாவதாக, சேவை வர்த்தகத்தின் தரம் மற்றும் பயன் உயர்ந்து வருவதால், சீனப் பொருளாதாரக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்கும் உயர் தரமான வளர்ச்சிக்கும் புதிய ஆதரவு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்