2018ஆம் ஆண்டில் சீன இருப்புப் பாதையின் புதிய வளர்ச்சி

பூங்கோதை 2018-09-11 16:57:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டில் சீன இருப்புப் பாதையின் புதிய வளர்ச்சி

2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் திங்கள் வரை, சீன இருப்புப் பாதைக்கான முதலீடு 46 ஆயிரத்து 120 கோடி யுவானாகும். மேலும், 960 கிலோமீட்டர் நீலமுடைய இருப்புப் பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உயர்வேக இருப்புப் பாதை அதில் சுமார் 95 விழுக்காட்டை வகித்துள்ளது என்று சீன இருப்புப் பாதை நிறுவனம் செப்டம்பர் 11ஆம் நாள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து, இந்நிறுவனத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் கூறும் போது, இதுவரை, இவ்வாண்டு திட்டப்படி தொடங்கப்படும் 23 புதிய திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான முதலீட்டுத் தொகை 40 ஆயிரத்து 330 கோடி யுவானாகும். மேலும், புதிதாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ள 960 கிலோமீட்டர் நீலமுடைய இருப்புப் பாதையில், உயர்வேக இருப்புப் பாதையின் நீலம், 911 கிலோமீட்டரை எட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்