சீன-பாகிஸ்தான் நல்லுறவு எந்த தரப்புக்கும் எதிரானதல்ல:சீனா

வான்மதி 2018-09-11 16:59:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் நல்லுறவு எந்த தரப்புக்கும் எதிரானதல்ல:சீனா

பாகிஸ்தானுடன் நல்லுறவை சீனா வளர்ப்பது எந்த தரப்புக்கும் எதிரானது அல்ல. மற்ற நாடுகளுடனான உறவை சீனாவும் பாகிஸ்தானும் வளர்ப்பதன் மூலம் சீன-பாகிஸ்தான் உறவு பாதிப்படையாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங் ஷுவாங் 10ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானின் புதிய அரசு அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய நிலைமையில் இருநாட்டுறவுக்கு நல்ல துவக்கத்தை உருவாக்குவது என்பது சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மேற்கொண்ட பாகிஸ்தான் பயணத்தின் முக்கிய இலக்காகும் என்று கூறினார்.

இப்பயணத்தின் போது இருதரப்பும் உருவாக்கிய 3 அம்ச உடன்பாடு பற்றியும் கேங் ஷுவாங் முக்கியமாக எடுத்துக்கூறினார். அரசியல் துறையில் நெடுநோக்கு தன்மையுடைய பரஸ்பர நம்பிக்கையை மேலும் ஆழமாக்குவது, பொருளாதாரத் துறையில் மக்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பாதுகாப்புத் துறையில் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்