கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டத்தின் முதன்மை கருத்தரங்கு

வான்மதி 2018-09-21 09:35:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டத்தின் முதன்மை கருத்தரங்கு

21ஆவது கடல்வழி பட்டுப்பாதை பற்றிய சீன குவாங்டோங் சர்வதேசத் தொடர்பு மன்றக் கூட்டத்தின் முதன்மை கருத்தரங்கு செப்டம்பர் 20ஆம் நாள் சூஹாய் நகரில் நடைபெற்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள், ஊடங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து புகழ்பெற்ற நிபுணர்கள், அறிஞர்கள், ஊடகத் தலைவர்கள் ஆகியோர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டத்தின் முதன்மை கருத்தரங்கு

2011ஆம் ஆண்டிற்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் டோமஸ் ஸார்ஜென்த் முதன்மை கருத்தரங்கில் சொற்பொழிவு ஆற்றினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு புதிய யுகத்தின் வரலாற்று ஓட்டத்துக்கு ஏற்றதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், இம்முன்மொழிவு, சீனாவுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கும் நன்மை புரியும். ஏனென்றால் இம்முன்மொழிவு கொண்டு வரும் புதிய போட்டி, உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளை, உலகளவில் புதிய சிந்தனையின் உருவாக்கத்தையும் தூண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரலாற்றுச் சக்கரத்தின் திசை, நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி, ஊடக ஒத்துழைப்பும் புதிய காலத்தில் நுழையுமாறு கோரியுள்ளது என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பீடர் ஃபுரான்கொபன் 2 ஆண்டுகளுக்கு முன் கணித்துள்ளார்.

கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டத்தின் முதன்மை கருத்தரங்கு

இது குறித்து சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் ஹு பாங்ஷெங் உரை நிகழ்த்துகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 5 ஆண்டுகளில் ஏற்பட்ட சாதனைகள் அனைவருக்கும் தெளிவாகத் தெர்ந்துள்ளது. இந்த சாதனைகளின் அடிப்படையில், எங்கள் ஊடகப் பரப்பு வளர்ச்சி மற்றும் பொது மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்