சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு முன்னேற்றம்

தேன்மொழி 2018-09-26 16:12:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு, அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட சீன-அமெரிக்க வர்த்தக சர்ச்சை, உலகளவில் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு, சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பின் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டும் அதிகரித்து வருகின்றது. இது குறித்து, சீன அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு வாரியத்தின் பொறுப்பாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் கூறுகையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டு, உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புத் துறையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது. சட்டத்துறையில், அறிவுசார் சொத்துரிமைக்கான பாதுகாப்பு வலுவடைந்து, தெளிவான முன்னேற்றங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

25-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தின் துணைத் தலைவர் ஹெ ஹுவா கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கண்டுபிடிப்புக்கான காப்புரிமை விண்ணப்பங்கள் மற்றும் வணிக சின்னங்களின் எண்ணிக்கைகள், 6இலட்சத்து 50ஆயிரமாகவும், 8இலட்சத்து 40ஆயிரமாகவும் இருந்தன. அதிகரிப்பு வேகம் ஆண்டுக்கு சராசரியாக, 3.1விழுக்காடு மற்றும் 10.3விழுக்காடாக இருக்கிறன. கடந்த ஆண்டில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புப் பணியின் மீதான மனநிறைவு நிலைமை தொடர்பாக, சீனா முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு முடிவின்படி, நூறு மதிப்பெண்ணுக்கு, பொது மக்கள் 76.69மதிப்பெண் வழங்கினர். சீனாவிலுள்ள வெளிநாட்டு தனியார் முதலீட்டு நிறுவனங்கள், 76.94மதிப்பெண்ணையும், கூட்டு முதலீட்டு நிறுவனங்கள், 80.16மதிப்பெண்ணையும் வழங்கின. மேலும், கடந்த ஆண்டில், சீனத் தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதற்காக,  செலவிட கட்டணத் தொகை, 2860கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது.

தவிர, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, சீனாவின் புத்தாக்க வளர்ச்சிக்கு தேவையான ஒன்று என்று சீனாவின் ச்சொங் நான் பொருளாதார மற்றும் சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை ஆய்வு மையத்தின் பேராசிரியர் வூ ஹென் துங் தெரிவித்தார். தற்போது, சட்டம், திட்ட அலுவல், கொள்கை, செயல்பாடு முதலிய துறைகளில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புடன் தொடர்புடைய முழு அமைப்புமுறை சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்