தடையில்லா வர்த்தக மண்டலத்தின் சீர்திருத்தத்தை விரிவாக்கும் சீனா

மதியழகன் 2018-09-29 19:18:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் விரிவான சீர்திருத்தத்தை ஆழமாக்குவதற்கான ஆணையத்தில் உயர் தரமான வளர்ச்சியை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட 6 ஆவணங்கள் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவற்றில், தடையில்லா வர்த்தக மண்டலத்தின் சீர்திருத்தம் மற்றும் புதுமையாக்கத்தை ஆதரிப்பதற்கான பல நடவடிக்கைகள் என்ற ஆவணம் அதிக கவனத்தை ஈர்த்தது. இந்த ஆவணத்தில் திட்டவட்டமான நடவடிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், வெளியுகலத்திற்கு முக்கிய அறிகுறிகளை அது வெளிக்காட்டுகிறது.

தடையில்லா வர்த்தக மண்டலத்தின் சீர்திருத்தம் மற்றும் புதுமையாக்கத்தை ஆதரிக்கும் விதமான இந்த புதிய நடவடிக்கைகள், சீனாவின் ஷாங்காய், குவாங்டோங், தியன்ஜின், ஃபூஜியான், ஹாய்னான் முதலிய 12 தடையில்லா வர்த்தக முன்னோடி மண்டலத்தில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடையில்லா வர்த்தக முன்னோடி மண்டலங்களில் எப்படி புத்தாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், தொழில் புரிவதற்கு உகந்த உலகின் முன்னிலை சூழ்நிலையை உருவாக்குவது என்பது இன்றையமையாது.

எதிர்காலத்தில், முதலீடு செய்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குதல், வசதியான வர்த்தக நிலையை மேம்படுத்துதல், பொருளாதாரத்திற்கு சேவை புரிந்து வரும் நிதித் துறைப் புத்தாக்கத்தை முன்னெடுத்தல், மனித வளத் துறையில் முன்னோடிச் சோதனையை முன்னேற்றுதல் ஆகியவற்றில் சீனா சீர்திருத்தம் மற்றும் திறப்பு நிலையை விரிவாக்கி வருகிறது. சீனாவில் தடையில்லா வர்த்தக மண்டலக் கட்டுமானத்தில் புதிய சுற்று சீர்திருத்தம், முன்பு இல்லாத அளவில் மேற்கொள்ளப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்