பொது மக்களின் தொழில் முனைப்பு மற்றும் புத்தாக்க வாரம் துவக்கம்

வான்மதி 2018-10-10 11:11:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டிற்கான பொது மக்களின் தொழில் முனைப்பு மற்றும் புதுமையாக்க வாரம், அக்டோபர் 9ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் சேங்து நகரில் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் தலைமை அமைச்சருமான லீகெச்சியாங் இது குறித்து அளித்த உத்தரவில், உயர் தரமான வளர்ச்சியின் தேவைக்கிணங்க, புத்தாக்கத்தை இயக்கற்றாலாகக் கொண்ட வளர்ச்சி நெடுநோக்கை மேலும் பெரும் முயற்சியுடன் செயல்படுத்தி, தொழில் முனைப்பு மற்றும் புதுமையாக்கத்தை தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்றும், நிர்வாகத்தை எளிதாக்குவதிலும், சேவையை மேம்படுத்துவதிலும் சீர்திருத்தத்தை ஆழமாக்கி, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளிட்ட அமைப்பு முறைகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, தொழில் முனைவோர் மற்றும் புதுமை புனைவாளர்களுக்கு சந்தை மயமாக்க சட்டப்படியான மற்றும் சர்வதேச மயமாக்க சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பொது மக்களின் தொழில் முனைப்பு மற்றும் புத்தாக்க வாரம் துவக்கம்

பொது மக்களின் தொழில் முனைப்பு மற்றும் புத்தாக்க வாரம் துவக்கம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான ஹான் ட்சேங் இந்நிகழ்வின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், சீன பொருளாதாரம், உயர் வேக வளர்ச்சியிலிருந்து உயர் தர வளர்ச்சியாக மாறியுள்ளது. புத்தாக்கத்தை உந்துசக்தியாகக் கொண்ட வளர்ச்சி நெடுநோக்கை ஆழமான முறையில் நடைமுறைப்படுத்தி, வளர்ச்சிக்கான இயக்காற்றலின் நிலை உயர்வை விரைவுபடுத்தி, சீனப் பொருளாதாரத்தின் நீண்டகால சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்