BMW குழுமத்தின் தலைவருடன் சீனத் தலைமையமைச்சர் சந்திப்பு

சிவகாமி 2018-10-11 09:33:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜெர்மன் “BMW” குழுமத்தின் தலைவருடன் சீனத் தலைமையமைச்சர் சந்திப்பு

ஜெர்மனி நாட்டின்“BMW”குழுமத்தின் தலைவர் ஹரால்ட் க்ருகரை சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், 10ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு நிலை மேலும் உயர்ந்து வருகின்றது. வெளிநாட்டு முதலீட்டுக்கான சிறந்த இடமாக சீனா தொடரும் என்று லீ கெச்சியாங் சுட்டிக்காட்டினார்.

ஜெர்மன் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தொழில் நிறுவனங்களும் சீனாவில் முதலீட்டை விரிவாக்குவதைச் சீனா வரவேற்கின்றது. கூட்டு வளர்ச்சியையும் கூட்டு வெற்றி பெறுவதையும் சீனா நனவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்