சீன-ஜப்பானிய உறவு பற்றி லீக்கெச்சியாங்கின் கருத்து

ஜெயா 2018-10-11 10:15:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஜப்பானிய உறவு பற்றி லீக்கெச்சியாங்கின் கருத்து

சீன-ஜப்பானிய தொழில் முனைவோர் மற்றும் முன்னாள் உயர்நிலை அதிகாரிகளின் 4ஆவது சுற்று பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜப்பானிய பிரதிநிதிகளை சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 10ஆம் நாள் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பலதரப்பு வாதம் மற்றும் தாராள வர்த்தக அமைப்பு முறையை சீனாவும் ஜப்பானும் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

சீன-ஜப்பானிய உறவு பற்றி லீக்கெச்சியாங்கின் கருத்து

மேலும், சீனாவும் ஜப்பானும், உலகில் முக்கிய பொருளாதாரங்களாக, வர்த்தகம் மற்றும் முதலீடு, நிதி மற்றும் நாணயம், புத்தாக்கம் மற்றும் உயர்நிலை தொழில் நுட்பம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை விரிவாக்கி, 3ஆவது தரப்பு சந்தையைக் கூட்டாக வளர்த்து, பலதரப்புவாதத்தையும் தாராள வர்த்தக அமைப்பு முறையையும் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சீன-ஜப்பானிய உறவு பற்றி லீக்கெச்சியாங்கின் கருத்து

புத்தாக்க முன்னேற்றம், 3ஆவது தரப்பு சந்தை ஒத்துழைப்பு ஆகியவை பற்றி ஜப்பானிய பொருளாதார துறை,சீனாவுடன் விவாதிக்க விரும்புகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முதியோர்களுக்கான பிரச்சினையைச் சமாளிப்பது முதலிய கூட்டு அறைகூவல்களை எதிர்நோக்கிய துறைகளிலான ஒத்துழைப்பை இரு தரப்பும் வலுப்படுத்த விரும்புகிறது என்று ஜப்பானிய முன்னாள் தலைமையமைச்சர் ஃபுகுடா யசுயொ கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்