முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி குறித்து வணிகத் துறையின் கூட்டம்

ஜெயா 2018-10-29 15:14:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி குறித்து வணிகத் துறையின் கூட்டம்

அக்டோபர் 29ஆம் நாள், சீன வணிக அமைச்சகம் செய்தியாளர்க் கூட்டத்தை நடத்தியது. இவ்வமைச்சகத்தின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தையின் பிரதிநிதியும் துணைத் தலைவருமான ஃபூசியீங், முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழா பற்றி அறிமுகப்படுத்தினார்.

இப்பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை, ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் துவக்க விழாவிலும் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். சுமார் 150 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழில் மற்றும் வணிக துறை வட்டாரத்தினர், தொடர்புடைய சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர் அழைப்பின் பேரில் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வர் என்று ஃபூசியீங் தெரிவித்தார்.

நவம்பர் 4ஆம் நாள் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது துணைவியார், வரவேற்பு விருந்தை நடத்துவர். 5ஆம் நாள் காலை, ஷிச்சின்பிங் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்துவார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக தேசிய அரங்குகளைக் கண்டுரசிப்பார். இக்காலத்தில் ஷிச்சின்பிங், தொடர்புடைய வெளிநாட்டு அரசுத் தலைவர்களையும் தலைமையமைச்சர்களையும் சந்திப்பார் என்று ஃபூசியீங் கூறினார்.

உலகில் இறக்குமதியை தலைப்பாகக் கொண்ட முதல் பெரிய ரக தேசிய நிலைப் பொருட்காட்சியான இப்பொருட்காட்சிக்கு, கண்காட்சி, கருத்தரங்கு ஆகிய 2 பகுதிகள் உள்ளன. கண்காட்சிப் பகுதியில், தேசிய வர்த்தக மற்றும் முதலீட்டுக் கண்காட்சியும், தொழில் நிறுவனங்கள் கண்காட்சியும் இடம்பெறுகின்றன. கருத்தரங்குப் பகுதி, ஹோங்ச்சியாவ் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்தரங்காகத் திகழ்கிறது. தேசிய வர்த்தக மற்றும் முதலீட்டுக் கண்காட்சியில், தேசிய புகழ், பொருளாதார மற்றும் வர்த்தக சாதனைகள், தனிச்சிறப்பு மற்றும் மேம்பாடு உடைய உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். இந்தோனேசியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ரஷியா, பிரேசில் முதலிய 12 நாடுகள், தனிச்சிறப்பு வாய்ந்த தேசிய அரங்குகளை அமைத்துள்ளன. சீன அரங்கில், சீன சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் மாபெரும் சாதனைகளைக் காட்டுவதோடு, சீனாவின் வளர்ச்சி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம் ஆகியவை, உலகிற்கு விளைவிக்கும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும். தொழில் நிறுவனங்கள் கண்காட்சியில், 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3000க்கும் மேலான தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ளும். அவை, தரம் மிக்க, தனிச்சிறப்பு வாய்ந்த உற்பத்திப் பொருட்களைக் கொண்டுவந்து, கண்காட்சி மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம், வாய்ப்புகளைக் கண்டுபிடித்து, ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன சந்தையை செழுமைப்படுத்தி, நுகர்வோரின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் என்று ஃபூசியீங் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்