முதல் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி விருந்து

ஜெயா 2018-11-05 09:25:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதல் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி விருந்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தன்னுடைய துணைவியார் பெங்லியுவானுடன் 4ஆம் நாளிரவு ஷாங்காய் மாநகரில், சீனாவின் முதல் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள பல்வேறு விருந்தினர்களையும் வரவேற்று விருந்தளித்து மகிழ்ந்தனர்.

மாலை 6:25 மணியளவில், வெளிநாட்டுத் தலைவர்கள் தங்களின் துணைவியர்களுடன் ஷாங்காய் சர்வதேச கூட்ட மையத்திற்குச் சென்றனர். ஷிச்சின்பிங்கும் பெங்லியுவானும், அவர்களுடன் உளமார்ந்த பரிமாற்றம் மேற்கொண்டு, நிழற்படங்களை எடுத்தனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், நாளை, சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி அதிகாரப்பூர்வமாகத் துவங்கும். பல்வேறு தரப்புகளின் பெரும் ஆதரவு மற்றும் முயற்சியுடன், இப்பொருட்காட்சி, உயர்நிலையுடைய, சர்வதேச பொருட்காட்சியாக மாறும். சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை முன்னேற்றி, பொருளாதார உலகமயமாக்கத்தின் புதிய மேடையை உருவாக்குவதைத் தூண்டுவதற்கு இது முக்கியப் பங்கு ஆற்றும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்