சீனாவின் மின்னணு வணிக நிறுவனத்தின் முயற்சிகள்

தேன்மொழி 2018-11-07 17:24:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அலி பாபா குழுமத்தின் சிஈஓ ட்சாங் யொங்

அலி பாபா குழுமத்தின் சிஈஓ ட்சாங் யொங்

ுதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி தொடர்பான முக்கிய நடவடிக்கையாக, முதலாவது உலக இறக்குமதித் துறை உச்சி மாநாடு நவம்பர் 6-ஆம் நாள் ஷாங்காயில் நடைபெற்றது. “பெரிய இறக்குமதி, புதிய உயிரின வாழ்க்கை ”என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்வுச்சி மாநாட்டில், புதிய காலம், புதிய இறக்குமதி, புதிய சில்லறை விற்பனை, உலக மயமாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, சீன மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆழந்த முறையில் விவாதம் நடத்தினர். சீனாவின் புகழ்பெற்ற மின்னணு வணிக நிறுவனமான அலி பாபா குழுமத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், 2கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வணிகப் பொருட்களை அலி பாபா இறக்குமதி செய்யும் என்றார்.

உலகில் புதிதாக சேர்ந்துள்ள நுகர்வுச் சந்தைகளில், சீனாவின் பங்கு விகிதம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 2017ஆம் ஆண்டில், உலகின் மொத்த சில்லறை விற்பனை தொகையில், சீனா நான்கில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. பெய்ஜிங், ஷாங்காய், குவாங் சோ, சென் ட்சன் ஆகிய சீனாவின் 4 பிரதேசங்கள், உலகின் முக்கிய 100 நுகர்வு மைய நகரங்களில் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சீனா, தொடர்ந்து ஐந்து முறை, சில நுகர்வுப் பொருட்களின் இறக்குமதி சுங்க வரியைக் குறைத்துள்ளது. அதோடு, நடுத்தர மற்றும் உயர் நிலை வணிகப் பொருட்களின் நுகர்வு விகிதமும் சீனாவில் இடைவிடாமல் உயர்ந்து வருகின்றது. தற்போது, மின்னணு வணிக அலுவல், நடமாடும் பணப்பரிவர்த்தனை, துடிப்பான சரக்குப் போக்குவரத்து, எண்ணியல் பொருளாதாரத் துறை தொடர்பாக வேலை வாய்ப்பு பெறுதல் முதலிய துறைகளில், சீனா, உலகளவில் முதலாவது இடத்தில் உள்ளது. இது பற்றி, சீன வர்த்தகம் மற்றும் முன்னேற்ற ஆணையத் தலைவர் கொ யன் அம்மையார் கூறுகையில், தற்போது, இலங்கையின் கறுப்புத் தேயிலை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பேரீச்சை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தனிச்சிறப்புப் பொருட்கள், 72 மணிநேரத்துக்குள், சீனப் பொது மக்களின் வீட்டினை வந்தடைய முடியும். அடுத்த 15 ஆண்டுகளில், 30இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வணிகப் பொருட்களையும், 10இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவையையும், சீனா இறக்குமதி செய்யும் என்றார்.

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்கவிழாவில், சீன அரசுத் தலைவர் கூறுகையில், சுங்க வரியை மேலும் குறைப்பதோடு, வணிகப் பொருட்கள் சுங்கதுறை மூலம் சீனாவில் நுழைவதற்கு அதிகமான வசதிகள் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இதனிடையில், இவ்வாண்டின் நவம்பர் திங்களில், உலக சுங்கதுறை,  15 விதிகளை வெளியிடவுள்ளது. இது, பல்வேறு நாடுகளின் சுங்கசாவடி துறைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, நாடு கடந்த மின்னணு வணிக அலுவல் கண்காணிப்புக்கான சட்ட அடிப்படையை உருவாக்கும் என்று இம்மாநாட்டிலிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்