ஷிச்சின்பிங்கின் ஷாங்காய் பயணம்

தேன்மொழி 2018-11-08 16:18:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு நாட்களில், சீனாவின் ஷாங்காய் மாநகரில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அம்மாநகரிலுள்ள தொழில் நிறுவனங்கள், குடியிருப்புப் பிரதேசங்கள், நகர் செயல்பாட்டுக்கான ஒட்டுமொத்த நிர்வாக மையம், உயர் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா ஆகியவற்றில், அவர் சோதனைப் பயணம் மேற்கொண்டார்.

சீனாவின் முதலாவது உயர் கட்டிடமாகவும், உலகின் 2ஆவது கட்டிடமாகவும் திகழ்கின்ற ஷாங்காய் கோபுரம் என அழைக்கப்படும் கட்டிடத்தில் பயணித்தபோது, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பின், சீனாவில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நினைவுகூர்ந்த ஷிச்சின்பிங், ஷாங்காய் மாநகர், உயிர்த்துடிப்புடன் இம்மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். அதோடு, உலகின் பெரிய மாநகரங்களின் வளர்ச்சி அனுபவங்களை ஆராய்ந்து பயன்படுத்தி, ஷாங்காய் மாநகரை, சோஷலிச நவீன மாநகராக மாற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஷிச்சின்பிங், ஷாங்காய் ஹுங் கோ பிரதேசத்திலுள்ள குடியிருப்பு இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். அங்கு, உள்ளூர் முதியவர்களின் வாழ்க்கை நிலைமை பற்றி விரிவான முறையில் கேட்டறிந்த அவர், நாம் முதிர்வடைந்த சமூகத்தில் நுழைந்துள்ளோம். இந்நிலையில், முதுமைக்கால காப்புறுதி, முதியவரின் உடல் நலம் முதலியவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

நகரச் செயல்பாட்டுக்கான ஒத்துமொத்த நிர்வாக மையத்தில், நகரின் மேலாண்மை தொடர்பான ஷாங்காயின் செயல்களைக் கேட்டறிந்தார். நகர மேலாண்மைப் பணி, அறிவியல், நுண்ணியம், நுண்மதி நுட்பம் ஆகிய திசைகளை நோக்கி, அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது ஷிச்சின்பிங் ஆலோசனை வழங்கினார்.

யாங் ஷன் காங் துறைமுகத்தின் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு நிலைமையை ஷிச்சின்பிங் அறிந்துகொண்டார். ஒரு பொருளாதார வல்லரசானது, கடல் வல்லரசாகவும், கடல் வழிப் போக்குவரத்திற்கான வல்லரசாகவும், திகழ வேண்டும். ஷாங்காய் மாநகரிலுள்ள பன்னாட்டு கடல் வழிப் போக்குவரத்து மையம் மற்றும் தாராள வர்த்தக சோதனைப் பிரதேசத்தின் கட்டுமானத்தை விரைவுப்படுத்துவதற்கும், வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்குவதற்கும், யாங் ஷன் துறைமுகம் வசதியை வழங்கி வருகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தவிர, ஷாங்காயின் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் மையப் பிரதேசமான ட்சாங் ஜியாங் அறிவியல் நகரில் பயணம் மேற்கொண்டபோது, அறிவியல் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை வலுயுறுத்தியதோடு, அறிவியலாளர்கள் புதிய முன்னேற்றங்களைப் பெறுவதற்கு ஷிச்சின்பிங் ஊக்கமளித்தார்.

இதனிடையில், 7ஆம் நாள் பிற்பகல், ஷாங்காய் நகராட்சிக் கட்சிக் கமிட்டி மற்றும் அரசின் பணி அறிக்கைகளை ஷிச்சின்பிங் கேட்டறிந்தார். ஷாங்காய் மாநகர், புத்தாக்கத் துறையின் முன்னோடியாக, முழு நாட்டின் சீர்திருத்த மற்றும் வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்