லீக்கெச்சியாங்-கியூபா அரசு கவுன்சில் தலைவர் சந்திப்பு

ஜெயா 2018-11-09 09:29:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லீக்கெச்சியாங்-கியூபா அரசு கவுன்சில் தலைவர் சந்திப்பு

லீக்கெச்சியாங்-கியூபா அரசு கவுன்சில் தலைவர் சந்திப்பு

சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள கியூபா அறசவை மற்றும் அமைச்சரவை தலைவரான தியாஸ் கேனலைச் சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 8ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் சந்தித்தார்.

லீக்கெச்சியாங் கூறுகையில், சீன-கியூபா பாரம்பரிய நட்பு ஆழமாக இருக்கிறது. மற்றதன் மைய நலன் பிரச்சினையில் இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து, சொந்த நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதற்கு ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து வருகிறது என்று தெரிவித்தார்.

திறப்பு மனப்பான்மையில் சீனா எப்போதும் ஊன்றி நின்று, கூட்டு வளர்ச்சி எனும் கோட்பாட்டைப் பின்பற்றி, பல்வேறு துறைகளிலும் இரு தரப்பின் ஒத்துழைப்பை சீனா முன்னேற்றி வருகிறது என்றும் லீக்கெச்சியாங் சுட்டிக்காட்டினார்.

தியாஸ் கேனல் கூறுகையில், சீனா, கியூபாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகும். நீண்டகாலமாக கியூபாவுக்கு சீனா வழங்கி வரும் ஆதரவு மற்றும் உதவிக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு இப்பயணத்தின் போது, இரு நாட்டு நட்பார்ந்த உறவை மேலும் வலுப்படுத்தி, உயர்நிலைப் பரிமாற்றத்தை நெருக்கி, பல்வேறு துறைகளிலான பயனுள்ள ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்க விரும்புவதாக அவர் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்