5ஆவது உலக இணைய மாநாடு நிறைவு

இலக்கியா 2018-11-09 16:32:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

5ஆவது உலக இணைய மாநாடு 9ஆம் நாள் வூச்சேன் மாவட்டத்தில் நிறைவடைந்தது. இம்மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, 5 ஜீ தகவல் தொடர்பு தொழில் நுட்பம், இணையப் பாதுகாப்பு முதலியவை குறித்து, பல நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் விவாதம் நடத்தியுள்ளனர்.

இம்மாநாட்டின் போது, 2018ஆம் ஆண்டு உலக இணைய வளர்ச்சி அறிக்கை, 2018ஆம் ஆண்டு சீன இணைய வளர்ச்சி அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன. இந்த அறிக்கைகளின்படி, சீனாவின் எண்ணியல் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 55 விழுக்காடு வகிக்கிறது. இது பற்றி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தக ஆணையத்தின் உறுப்பினர் விவியன் ரீடின் கூறுகையில், சீன எண்ணியல் பொருளாதார வளர்ச்சி, உலகின் முன்னணியில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்