சீர்திருத்த மற்றும் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவுக்கான கண்காட்சி
மாபெரும் சீர்திருத்தம் என்ற தலைப்பிலான சீனாவின் சீர்திருத்த மற்றும் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவுக்கான பெரிய கண்காட்சியின் துவக்க விழா நவம்பர் 13ஆம் நாள் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் உறுப்பினருமான வாங் ஹூநிங், இவ்விழாவில் உரை நிகழ்த்தினார்.
இக்கண்காட்சியில், வரலாற்று நிழற்படங்கள், எழுத்துக்கள் மற்றும் காணொளிகள், உண்மையான கருவிகள், மணல் திட்டு மாதிரிகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக, குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, மக்களின் வாழ்க்கையிலுள்ள மாபெரும் முன்னேற்றத்தையும், சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியையும் இக்கண்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.