சீனச் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் 40 ஆவது ஆண்டு நிறைவுக்கான கண்காட்சி

சரஸ்வதி 2018-11-20 11:08:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனச் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் 40 ஆவது ஆண்டு நிறைவுக்கான கண்காட்சி

மாபெரும் சீர்திருத்தம் எனப்படும் சீனச் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் 40 ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டக் கண்காட்சி அண்மையில் பெய்ஜிங் மாநகரில் அமைந்துள்ள சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் தொடங்கியது. சீனாவுக்கான பல நாடுகளின் தூதர்கள், வெளிநாட்டு நிபுணர்கள், வெளிநாட்டு வணிக நிறுவனங்களின் பணியாளர்கள் முதலிய ஆயிரத்துக்கும் மேலான பிரதிநிதிகள், 19ஆம் நாள், கண்காட்சியினைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர். கடந்த 40 ஆண்டுகளில், சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் மூலம், சீனா பெற்றுள்ள சாதனைகள் உலகின் மிகுந்த கவனத்தை ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றுள்ளன. மேலும் உயர்வான நிலையில், சீனாவுடன் ஒத்துழைப்பதன் மூலம், ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றியை பெற வேண்டும் என்று இதில் கலந்துகொண்டோர் விருப்பம் தெரிவித்தனர்.

சீனாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ரஹூல் தாரிக் இதில் பங்கெடுத்தார். ஃபு சிங் எனப்படும் அதி விரைவு தொடர்வண்டியின் மாதிரியில் உருவாக்கப்பட்ட, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து மகிழ்ந்து அவர், போக்குவரத்து, எண்ணியல் பொருளாதாரம், இணைய தொழில் நுட்பம் போன்ற துறைகளில் சீனாவின் மாபெரும் வளர்ச்சி, தனது மனதில் ஆழப்பதிந்துள்ளது என்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

சீனாவின் மறுமலர்ச்சியையும் சீனப் பொருளாதார அதிகரிப்பையும் நான் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். இது ஒரு அற்புதம். பாகிஸ்தானைப் பொருத்தவரை, சீனாவின் வளர்ச்சியிலிருந்து பல அனுவபங்களைக் கற்றுக்கொள்ளலாம். பரந்த துறைகளில், சீனாவுடன் ஒத்துழைத்து, கூட்டு வெற்றியை நனவாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் முக்கிய தெரிவு, வரலாற்றில் மாபெரும் மாற்றங்கள், எதிர்காலத்தை எதிர்நோக்குதல் முதலிய 6 காட்சி அரங்குகள் உள்ளன. வரலாற்றுப் படங்கள், எழுத்துக்கள், காணொளி, மணல் திட்டு மாதிரி, நேரடி அனுபவம் உள்ளிட்ட வழிமுறைகள் மூலம், கடந்த 40 ஆண்டுகளில், குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டிற்கு பிறகு, சீனப் பொது, மக்களின் உற்பத்தியிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றங்களை இக்கண்காட்சி சிறப்பாக விளக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்