​வர்த்தகச் சர்ச்சைக்குத் தீர்வு காண சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் முயற்சி

வான்மதி 2018-12-02 17:01:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தகச் சர்ச்சைக்குத் தீர்வு காண சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் முயற்சி

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 8 மாதங்களுக்கும் மேல் தொடர்ந்த வர்த்தகச் சர்ச்சை, இவ்வாண்டின் இறுதியில் தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பைப் பெற்றுள்ளது.

டிசம்பர் முதல் நாள் அர்ஜென்டினாவில் ஜி20 அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கெடுத்த சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகப் பிரச்சினை குறித்து விவாதம் நடத்திய அவர்கள் ஒத்த கருத்துக்கு வந்த பின்னர், கூடுதலான சுங்கவரி விதிப்பு உள்ளிட்ட வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதென முடிவெடுத்தனர்.

சீன-அமெரிக்க வர்த்தகச் சர்ச்சை தீவிரமாகும் அபாயமான தருணத்தில், இருநாட்டு அரசுத் தலைவர்கள் கூட்டு முயற்சியுடன் இந்தப் போக்கை நிறுத்தினர். இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க விரும்பும் மனநிலையை இது வெளிப்படுத்தியுள்ளது.

பொருளாதாரம் உலகமயமாகும் இன்று, சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக மோதலை நிறுத்துவது, இருநாடுகளுக்கும் முழு உலகிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. அண்மையில் நடைபெற்ற முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில், அமெரிக்காவின் சுமார் 180 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த எண்ணிக்கை இப்பொருட்காட்சியில் கலந்து கொண்ட ஜப்பான் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே. சீன-அமெரிக்க வர்த்தகச் சர்ச்சை ஏற்படுத்திய பாதிப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.

முன்னேற்றப் பாதையில், வெயிலோ மழையோ, ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து ஒன்றுக்கொன்று நலன் தரும் அடிப்படையில் கூட்டு வெற்றி பெறுவது என்பது, ஒரேயொரு சரியான தெரிவாகும். இது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜி20 அமைப்பின் நடப்பு உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய போது வழங்கிய கணிப்பு. சீனாவும் அமெரிக்காவும் வர்த்தகச் சர்ச்சையைக் கையாளும் போது இதற்குப் பொருந்திய மனப்பான்மை மற்றும் கோட்பாட்டுடன் செயல்பட வேண்டும்.

இருநாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கிணங்க, இருதரப்புகளின் வர்த்தகக் குழுக்கள் கூடிய விரைவில் புதிய சுற்று கலந்தாய்வு நடத்த உள்ளன. சீனா முன்பைப் போலவே இருநாடுகளின் பொது நலன்கள் மற்றும் உலக வர்த்தக ஒழுங்கைப் பேணிக்காக்கும் அடிப்படையில் பயனுள்ள தீர்வு முறையை வழங்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்