ஷிச்சின்பிங்கிற்கு ஆர்ஜென்டீனா உயரிய விருது வழங்கல்
டிசம்பர் 2ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு, ஆர்ஜென்டீனா அரசுத் தலைவர் மேக்ரி, தி ஆர்டர் ஆஃப் லிபரேடர் சேன் மார்டீன் என்ற பதக்கத்தை வழங்கினார். இவ்விருது, ஆர்ஜென்டீனா அரசு, வெளிநாட்டவர் ஒருவருக்கு அளிக்கும் மிக உயரிய விருதாகும்.
ஷிச்சின்பிங்கின் தலைமையில் சீனா பெற்றுள்ள மாபெரும் சாதனைகளையும், ஆர்ஜென்டீனா-சீன உறவையும், மேக்ரி வெகுவாகப் பாராட்டினார்.