சீனத் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தலைவர்கள் குழுவின் கூட்டம்
தேசிய அறிவியல் தொழில்நுட்பத் தலைவர்கள் குழுவின் முதலாவது கூட்டம், 6ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங்கின் தலைமையில் நடைபெற்றது. லீக்கெச்சியாங் கூறுகையில், சீர்திருத்த ஆழமாக்கம், சமூகத்தில் புத்தாக்க ஆற்றலைத் தீவிரமாக்குவதோடு, வளர்ச்சிக்காக, அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தின் ஆதாரப் பயன்களையும் மேலும் சிறப்பாக வெளிக்காட்ட முடியும். மேலும், சீரான புத்தாக்கச் சூழலை உருவாக்கும் வகையில், அறிவியல் தொழில்நுட்ப முறைமையின் சீர்திருத்தத்தை ஆழமாக்கி, அறிவுசார் சொத்துரிமையைப் பெரிதும் பேணிக்காக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.