ஹுவாவெய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய: சீனா கோரிக்கை

மதியழகன் 2018-12-07 18:47:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹுவாவெய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய: சீனா கோரிக்கை

ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சோ அம்மையாரை கனடா கைது செய்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங் ஷுவாங் 7ஆம் நாள் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் மீண்டும் நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்தினார்.

தற்போது வரை, மெங் வான்சோ இவ்விரு நாடுகளின் சட்ட விதிகளை மீறியுள்ள எந்த ஆதாரங்களையும், கனடாவோ அல்லது அமெரிக்காவோ சீனாவிடம் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகள் மெங் வான்சோவை கைது செய்ததன் காரணங்களை உடனடியாக தெளிவுபடுத்தவும், அவரை உடனடியாக விடுதலை செய்து, அவருடைய சட்டப்பூர்வமான உரிமைகளையும் நலன்களையும் பயனுள்ள முறையில் பேணிக்காக்கவும் வேண்டும் என்றும் கேங் ஷுவாங் வலியுறுத்தினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்