சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணிக்குப் பின் வறுமை ஒழிப்பு நிலைமை

ஜெயா 2018-12-14 09:38:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணிக்குப் பின் வறுமை ஒழிப்பு நிலைமை

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணிக்குப் பின் வறுமை ஒழிப்பு நிலைமை

13ஆம் நாள், சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி தலைமைக் குழு அலுவலகத்தின் இயக்குநர் லியூயோங்ஃபூ பெய்ஜிங்கில் கூறுகையில், சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட கடந்த 40 ஆண்டுகளாக, மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த வறுமை ஒழிப்பு முன்னேற்றப் போக்கு சீனாவில் நிகழ்ந்துள்ளது. 70 கோடிக்கும் மேலான கிராமப்புற மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு வரை, தற்போதைய வரையறையின் கீழ் வறிய மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள வறிய மக்கள் அனைவரையும் வறுமையிலிருந்து விடுவிப்பதை சீனா நனவாக்கவுள்ளது. பிரதேச வறுமை நிலைமையைத் தீர்க்கவுள்ளது. சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த வறுமை ஒழிப்பு வளர்ச்சிப் பாதை அற்புதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இவ்வாண்டு சீனாவில் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டாகும். கடந்த 40 ஆண்டுகளாக, சீனாவின் கிராமப்புங்களில் வறுமை விகிதம் 97.5 விழுக்காட்டிலிருந்து தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. 2018ஆம் ஆண்டில் இது 2 விழுக்காட்டுக்குக் கீழ் அடையும் என்று மதிப்பிடப்படுகிறது. லியூயோங்ஃபூ கூறுகையில், சீனாவின் வறுமை ஒழிப்பு வளர்ச்சி உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனாவின் நிலைமைக்கு ஏற்ப, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த வறுமை ஒழிப்புப் பாதையை ஆராய்ந்தது அதற்கான அடிப்படைக் காரணமாகும் என்றும் தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பின் பயனை உத்தரவாதம் செய்யும் வகையில், கடுமையான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறையை சீனா நிலைநிறுத்தி வருகிறது. இதன் மூலம் போலி வறுமை ஒழிப்பு பெருமளவில் தடுக்கப்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்புப் பணி பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, சீனாவில் சுமார் 3 கோடி வறிய மக்கள் தொகை உள்ளது. லியூயோங்ஃபூ கூறுகையில், வேறுபட்ட காரணங்களால் ஏற்படும் வறிய மக்களுக்கு, வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உழைப்பாற்றலைக் கொண்டவர்களை வேலை செய்வதை ஊக்குவித்து, உழைப்பாற்றலைக் கொள்ளாதவருக்கு சமூக காப்புறுதியை வழங்க வேண்டும் என்றும் கூறினார். இப்போது முதல், தற்போதைய வரையறைக்குக் கீழ் வறுமை ஒழிப்பு இலக்கு நனவாக்குவது வரை 2 ஆண்டுகள் உள்ளன. இன்னல்களைச் சமாளித்து, வறுமை ஒழிப்புப் பணியில் வெற்றி பெற சீனா முழு மூச்சுடன் பாடுபடவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்