சீனாவின் மறுசீரமைப்புப் போக்கில் தைவான் மிக முக்கியப் பகுதி

கலைமணி 2019-01-02 17:36:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் மறுசீரமைப்புப் போக்கில் தைவான் மிக முக்கியப் பகுதி. இந்நிலையில் சீனாவுடன் தைவானை ஒருங்கிணைப்பது, உலகிற்கு நன்மை தரும்.

40 ஆண்டுகளுக்கு முன், தைவானின் பொருளாதாரம், சீனாவின் பெருநிலப்பகுதியை விட சீராக வளர்ந்தது. ஆனால், 40 ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவின் பெருநிலப்பகுதி, உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. தைவானின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ஏற்றுமதி சந்தையாகவும், மிக முக்கிய முதலீட்டு இலக்காகவும் சீன பெருநிலப்பகுதி திகழ்கின்றது. 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் திங்கள் வரை, இரு கரைகளுக்கிடையிலான வர்த்தக தொகை 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இத்தொகை, 2017ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16 விழுக்காடு அதிகம்.

40 ஆண்டுகால சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணிக்குப் பிறகு, சீனா புதிய யுகத்தில் நுழைந்துள்ளது. வரலாற்றில் சீரமைப்புக்குரிய மிகச் சரியான காலம் இதுவே. சீனா, இரு கரைகளின் அமைதியான ஒருமைப்பாட்டை முன்னேற்றும் அடிப்படையையும் நிபந்தனையையும் கொண்டுள்ளது. இந்நிலையில், இரு கரையுறவின் வளர்ச்சியை விரைவுபடுத்த பெருநிலப்பகுதி முன்முயற்சி எடுக்கின்றது என்று சீனாவின் தைவான் செய்தி ஊடகம் ஒப்புக்கொண்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்