சீனாவில் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு அதிகரிப்பு

இலக்கியா 2019-01-11 16:55:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு அதிகரிப்பு

அறிவுசார் சொத்துரிமை பணியகங்களின் தலைவர்கள் கூட்டம் அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டின் இறுதி வரை, ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகியவை தவிர்த்து, சீனாவில் கண்டுபிடிப்பு அறிவுசார் காப்புரிமையின் எண்ணிக்கை, 16 இலட்சத்து 2ஆயிரத்தை எட்டி, 2017ஆம் ஆண்டில் இருந்ததை விட, 18.1 விழுக்காடு அதிகரித்தது. உள்நாட்டு வணிகச் சின்னங்களின் பதிவு எண்ணிக்கை, ஒரு கோடியே 80 இலட்சத்து 49ஆயிரத்தை எட்டியது. இது, 2017ஆம் ஆண்டில் இருந்ததை விட 32.8 விழுக்காடு அதிகம். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அறிவுசார் சொத்துரிமைக்கான மொத்த பயன்பாட்டுக்கட்டணத் தொகை, 3500 கோடி டாலரைத் தாண்டியது என்று இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அறிவுசார் சொத்துரிமைத் துறையில் வல்லரசாக சீனா மாறியுள்ளது. இத்துறையின் மீதான பாதுகாப்பு நடவடிக்கைகள், சீனப் பொருளாதாரத்தின் தரமான வளர்ச்சிக்கும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய உந்து சக்தியை ஊட்டவுள்ளன என்று மேற்கூறிய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்