ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: மிகுந்த அக்கறையுள்ளவர்

தேன்மொழி 2019-02-06 16:54:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒவ்வோர் ஆண்டின் வசந்த விழாவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீனாவின் வறுமைப் பிரதேசத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்டு, வறிய மக்களின் வாழக்கை நிலையை அறிந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சீனாவின் அதி உயர் தலைவரான ஷிச்சின்பிங் பல முறை உரைகள் நிகழ்த்தியபோதும், குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்கும் பாதையில், வறுமையில் உள்ள எவர் ஒருவரும் பின்தங்கி விடக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார். பரந்துபட்ட விவசாயிகளுடன், சீர்திருத்த வளர்ச்சி சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: ஷிச்சின்பிங் மிகுந்த அக்கறையுள்ளவர்

2016-ஆம் ஆண்டில், ஷிச்சிங்பிங், ஹுனான் மாநிலத்தின் சியாங் சி டூ ச்சியா இனம் மற்றும் மியெள இனத் தன்னாட்சி மாவட்டத்தில், சோதனைப் பயணம் மேற்கொண்டார். இப்பிரதேசத் தலைவர் குவோ ஜியன் சுயுனுடன் உரையாடல் நிகழ்த்தியபோது, இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஹுவா கங் வட்டத்தின் ஷி பா டொங் எனும் கிராமத்தின் நிலைமையை அறிந்து கொண்ட பிறகு, ஷிச்சின்பிங் கூறுகையில்,

“2015ஆம் ஆண்டில், எத்தனை ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர் ?”என்று ஷிச்சின்பிங் கேட்டார். “ஏழுபேர்”என்று குவோ ஜியன் சுயன் பதிலளித்தார்.

உண்மையில், இவ்வாறு உள்ளூர் திருமண நிலைமையைக் கேட்றிவதன் மூலம், வறிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வறுமை ஒழிப்புப் பணியின் முன்னேற்றத்தை அறிந்துகொள்ள முடியும் என்று ஷிச்சின்பிங் நம்பினார்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: ஷிச்சின்பிங் மிகுந்த அக்கறையுள்ளவர்

முன்பு, வறுமை காரணமாக, இக்கிராமத்தைச் சேர்ந்த இளம் ஆண்கள் திருமணம் புரிவதில் இன்னல் நிலவியது.

ஆண்டுக்கு நபர்வாரி வருமானம் 2300 யுவான் என்ற சீனக் கிராமத்தின் வறுமை வரைவுக்கு இணங்க, ஆயிரம் பேருக்கு குறைந்த இக்கிராமத்தில், 2013ஆம் ஆண்டில், தனிநபர் வருமானம், 1700 யுவானுக்குக் குறைந்தது. இந்த அளவு, அவ்வாண்டில் சீன முழு நாட்டின் கிராமவாசிகளின் சராசரி வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதிக்குக் குறைந்தது. நடைமுறைக்கேற்ற இலக்குடைய வறுமை ஒழிப்புப் பணி மேற்கொள்வது என்ற கூற்றை, ஷிச்சின்பிங் முதன்முறையாக ஷு பா டொங் கிராமத்தில் முன்வைத்தார். மேலும், சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடுதல், கள நிலைமைக்கு ஏற்பச் செயல்படுதல், நிலைமையை வகைப்படுத்தி வழிக்காட்டல் மேற்கொள்தல் ஆகிய கோட்பாடுகளை அவர் எடுத்துக்கூறினார். தொடர்ந்து, உழைப்பாற்றல் பொருளாதாரம், சிறப்பு பயிரிடுதல், சிறப்பு கால்நடை வளர்ப்பு, மியெள இனத் தனிச்சிப்புடைய பூ வேலைப்பாடு, சுற்றுலாப் பயணம் ஆகிய ஐந்து துறைகளை வளர்க்க, ஷு பா டொங் கிராமம் முடிவு செய்தது. இதனைச் செயல்படுத்தியதன் மூலம், 2017ஆம் ஆண்டில் இக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டனர். வறுமை ஒழிப்புப் பணியில் கிடைத்த அனுபவங்கள், இதர வறிய கிராமங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றது. ஷு பா டொங் கிராமம் வறுமையிலிருந்து விடுபட்டதுடன், இக்கிராமத்தைச் சேர்ந்த இளம் ஆண்கள் பலர், திருமணம் செய்து விட்டனர்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: ஷிச்சின்பிங் மிகுந்த அக்கறையுள்ளவர்

2017ஆம் ஆண்டின் ஜுன் திங்கள், ஷிச்சின்பிங், ஷான் சி மாநிலத்தின் லு லியங் மலைப் பிரதேசத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். லு லியங் மலைப் பிரதேசத்தில், வறுமை மிகுந்த கிராமங்கள் பல நிலவி வருகின்றன. ட்செள ஜியா வா எனும் கிராமம், இன்னல் மிகுந்த கிராமங்களுள் ஒன்றாகும். இக்கிராமத்தைச் சேர்ந்த லியூ ஃபூ யொ என்பவரின் வீட்டிலுள்ள படுக்கையில் அமர்ந்த ஷிச்சின்பிங், அவருடைய ஓர் ஆண்டின் வருமானம், மிகுந்த கவலையை ஏற்படுத்தும் இன்னல்கள் ஆகியவற்றை விபரமாகக் கேட்டறிந்தார். அப்போதைய உரையாடலை நினைவுகூரிய போது லியூ ஃபூ யொ கூறியதாவது,

என் வீட்டுச் செலவினங்களில் எதற்கெல்லாம் அதிகமாகச் செலவிட்டேன்., எந்தெந்த துறைகளில் முக்கியமாக செலவிட்டேன் என்று ஷிச்சின்பிங் கேட்டறிந்தார். மாவு, அரிசி, எண்ணெய், உப்பு முதலிய அன்றாட வாழ்க்கை உணவுப் பொருட்களைத் தவிர, என்னுடைய வருமானத்தில் 80விழுக்காட்டுப் பகுதி, மருந்துகள் வாங்குவதற்காகச் செலவிடப்பட்டது. சிகிச்சை செலவே அதிகம், அதுவே கவலையை ஏற்படுத்துகிறது என்று பதிலளித்தேன் என்றார்.

கள ஆய்வு மூலம் கிடைத்த தரவுகளின்படி, சீனாவில், நோய் மற்றும் சிகிச்சையினால் வறிய நிலையை எட்டிய மக்கள் தொகை, அனைத்து வறிய மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், 40விழுக்காட்டுக்கும் மேலாகும். இதற்காக, உடல் நலத்துடன் கூறிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை சீனா ஆழமான முறையில் செயல்படுத்தி, ஏற்கனவேயுள்ள மருத்துவக் காப்புறுதி அமைப்புமுறையை வலுப்படுத்தி வருகின்றது. 2018ஆம் ஆண்டில், நோய் மற்றும் சிகிச்சையினால் வறிய நிலையை எட்டியவர்களில், 58இலட்சத்து 10ஆயிரம் பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். இவ்வாண்டின் புத்தாண்டுக்கான நல்வாழ்த்து செய்தியில், ஷிச்சின்பிங் கூறுகையில்,

2018ஆம் ஆண்டில், வறுமை ஒழிப்புப் பணி பல முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. முழு நாட்டிலும், 125 வறிய வட்டங்கள், வறுமை ஒழிப்புக்கான சோதனைப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன. ஒரு கோடி பேர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். புற்று நோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டதோடு, அவை மருத்துவக் காப்பீட்டுப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டன. நோய் காரணமாக உண்டாகும் வறுமை, மேலும் நன்றாகத் தீர்க்கப்பட்டு வருகின்றது. வறிய மக்களின் நிலை குறித்து எப்போதும் கவலைப்படுகின்றேன். புத்தாண்டை முன்னிட்டு, மக்கள் அனைவரின் வாழ்க்கை மேலும் செழிப்புறுவதற்கு நல்வாழ்த்துக்கள்!என்று கூறினார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனதில், இன்னல்களால் அல்லல்படுபவர்கள், மதிப்பு மற்றும் மேன்மையுடன் வாழ வேண்டும் என்பதே உள்ளது. அவரின் மனதில் இவ்வாறு இருப்பதற்குக் காரணம், குறிப்பிட்ட வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் கட்டிமுடிக்க வேண்டும் என்பதாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்