ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: முதியவர்கள் மீது ஷிச்சின்பிங்கின் உளமார்ந்த கவனம்

வான்மதி 2019-02-07 15:56:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: முதியவர்கள் மீது ஷிச்சின்பிங்கின் உளமார்ந்த கவனம்

சீனச் சமூகம் எதிர்கொள்கின்ற மூப்படைதல் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் தற்போதைய நிலையில், முதியவர்கள் ஒவ்வொருவரும் தனது முதுமைக்காலத்தில் எப்படி மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வது என்பது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கவனத்தை ஈர்த்து வரும் பிரச்சினையாகும். இன்றைய நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங்கும் பொது மக்களும் எனும் சிறப்பு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியாக, முதியவர்கள் மீது ஷிச்சின்பிங்கின் உளமார்ந்த கவனம் பற்றி கூறுகின்றோம்.

மக்கள் தொகையில் முகியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, தற்போதைய சீனா எதிர்கொள்ளும் முக்கிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாகும். ஒரு மதிப்பீட்டின்படி, 2050ஆம் ஆண்டளவில், சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை வரலாற்றில் மிக உயர்ந்த அளவிலான 48.7 கோடியை எட்டி, மொத்த மக்கள் தொகையில் 34.9 விழுக்காடு வகிக்கும்.

2012ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளராக ஷிச்சின்பிங் பதவியேற்ற பிறகு, தனது உள்நாட்டு ஆய்வுக்கான மும்முரமான நிகழ்ச்சி நிரலில், முதியோர் இல்லங்களுக்கும், முதியோர் காப்பகங்களுக்கும் சென்று பார்க்கும் பயணத்தைச் சேர்த்து, சீனாவின் முதியோர் பராமரிப்பு துறையின் வளர்ச்சியை கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: முதியவர்கள் மீது ஷிச்சின்பிங்கின் உளமார்ந்த கவனம்

ஷாங்காய், சீனாவில் மிக முன்னதாக மூப்படைதல் சமூகத்தில் நுழைந்த மாநகரமாகும். ஷாங்காயின் ஹோங்கோவ் மாவட்டத்தில், பதிவு செய்யப்பட்ட முகியோரின் எண்ணிக்கை உள்ளூர் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டை எட்டியுள்ளது. 2018ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் நாள், ஷிச்சின்பிங் இம்மாவட்டத்தின் நகரவாசி நிலையத்தைச் சேர்ந்த ஜியாசிங் தெரு குடியிருப்புப் பகுதியின் முதலாவது கிளை நிலையத்தில் பயணம் மேற்கொண்டார். நகரவாசிகளுக்கு உதவியளிக்கும் இந்த நகரவாசி நிலையத்தைச் சேர்ந்த முதியோர் காப்பகத்தின் பகல் பராமரிப்பு மையத்தில், ஷிச்சின்பிங் முதியவர்களிடம் உரையாடிய போது தனது அக்கறையை எடுத்துக்கூறினார்.

மூப்படைதல் பிரச்சினை, நடுவண் அரசின் மிகுந்த அக்கறை உள்ள பிரச்சினைகளில் ஒன்றாகும். நமது சீனா மூப்படைதல் சமூகத்தில் நுழைந்துள்ளது. பொது மக்களின் இன்பமான வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று, முதியவர்களின் இன்பம், முதுமைக்கால வாழ்க்கை மற்றும் முதியோரின் உடல்நலம் என்பதாகும். எனவே இந்த காப்பகத்தில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அர்த்தமுள்ளவை. முதியோர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் என கண்டறிந்துள்ளேன். உங்களுக்கு ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவும் என்றுமே மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகள் என்று கூறினார்.

முதுமைக்கால பராமரிப்பு தொடர்பான கொள்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தி, மேலதிக முதியவர்களுக்கு நன்மை தருவது என்பதில், சீனாவின் உச்சநிலை தலைவர் ஷிச்சின்பிங் எப்போதுமே கவனம் செலுத்துகிறார்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: முதியவர்கள் மீது ஷிச்சின்பிங்கின் உளமார்ந்த கவனம்

தற்போது ஹோங்கோவ் மாவட்டம் முதியோருக்கான சேவைத் தரத்தை உயர்த்தும் 3 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதியோருக்கான பகல் காப்பகங்கள் 60ஆகவும், முதியோருக்கான உணவகங்கள் 100 ஆகவும் அதிகரிக்கப்படும். முதுமைக்கால மேலாளர் எண்ணிக்கை 500ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் மாநகரின் பொதுத்துறை பணியகத்தின் முதுமைக்காலப் பணிப்புரிவுத் தலைவர் சென் யுயேபின் செய்தியாளரிடம் கூறியதாவது

வரும் 3, 4 ஆண்டுகளுக்குள், முதியோருக்கான சேவை வசதிகளின் எண்ணிக்கை மடங்காக அதிகரிக்கும். வசதிகளின் எண்ணிக்கை அளவிலான அதிகரிப்பு மட்டுமல்லாமல், முதியோருக்கான சேவை தரத்தின் உயர்வும் மேலும் முக்கியமானதாக இருக்கும். அடுத்த கட்டம், முதியவர்களின் மனநிறைவு, மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்வுகளை உயர்த்தும் வகையில் பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: முதியவர்கள் மீது ஷிச்சின்பிங்கின் உளமார்ந்த கவனம்

சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள பெரிய நகரங்கள் மட்டுமல்ல, மேற்கு சீனாவின் சில மாநிலங்கள் மற்றும் நகரங்களும் முதியோருக்கு சேவைபுரியும் பல்வகை வடிவங்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றன. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், கான்சூ மாநிலத்தின் தலைநகரான லான்சோவைச் சேர்ந்த சேங்குவான் மாவட்டத்திலுள்ள முதியோருக்கான உணவகத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் தாமாகவே அங்குள்ள முதியவர்களுக்கு புதிதாக சமைக்கப்பட்ட உணவு மற்றும் வறுவல்களை எடுத்து வழங்கினார்.

ஷி பாச்சுவான் எனும் பாட்டியுடன் ஷிச்சின்பிங் நடத்திய உரையாடல், செய்தி ஊடகங்களால் வெளியிடப்பட்ட பிறகு, பரபரப்பை ஏற்படுத்தியது. ஷி பாச்சுவான் என்பவரின் குடும்பம், ஹுநான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள து ஜியா மற்றும் மியாவ் இனத் தன்னாட்சி சோவின் ஷி பா தொங் கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பமாகும். 2013ஆம் ஆண்டு ஷிச்சின்பிங் மேற்கொண்ட ஓர் ஆய்வுப் பயணத்தின் போது, அவர் வளைவு நெளிவான குறுகிய மலை பாதையில் நடந்து சென்று, வயதான ஷி பாச்சுவான் பாட்டியைப் பார்த்தார். இருண்ட அறையில், ஷி பாச்சுவான் பாட்டி வந்தவரைப் பார்த்தார். ஆனால் வந்தவரின் அடையாளம் அவருக்குத் தெரியவில்லை. இவர் பெய்ஜிங்கிலிருந்து வந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர். அவர் உங்களைச் சந்திக்க வந்தார் என்று கிராம ஊழியர் ஒருவர் பாட்டியிடம் அறிமுகம் செய்தார்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: முதியவர்கள் மீது ஷிச்சின்பிங்கின் உளமார்ந்த கவனம்

பிறகு பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் ஷி பாச்சுவான் பாட்டியிடம் கூறிய போது, உங்களை அக்கா என அழைக்கலாம். உங்களைச் சந்திப்பதை எதிர்பார்க்கின்றேன். உங்களுக்கு வயது 64. எனக்கு வயது 60. எதிர்காலத்தில் நாம் அதிகமாக சந்திக்கலாம் என்று தெரிவித்தார்.

ஷி பாச்சுவான் பாட்டி கூறுகையில், இன்று உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பெரிய தலைவராக இருக்கிறீகள். மேலும், எங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தும் உள்ளூர் ஊழியர் போலவும் இருக்கிறீர்கள். பொது மக்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கையில், நான் பொது மக்களுக்கு சேவைபுரியும் பணியாளர் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்