ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: ஷிச்சின்பிங்கின் மற்றொரு அடையாளம்

மதியழகன் 2019-02-08 15:40:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குழந்தைகளின் முன்னிலையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தன்னை சிறிய நண்பர்களின் ‘பெரிய நண்பர்’ஆக அழைத்தார். குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் ஷிச்சின்பிங், பலமுறை பல்வேறு இடங்களில் குழந்தைகளின் மீதான தனது எதிர்பார்ப்புகளைத் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங், தாம் படித்த முன்னாள் பள்ளிக்கு சென்ற போது, தான் உள்பட அனைவரும் மாணவர்கள் தான் என்று கூறினார். ஆசிரியர்களுக்கான அவருடைய மதிப்பு மற்றும் நன்றி, ஆசிரியர்களுக்கான அவருடைய ஊக்கம் ஆகியவை, சீனக் கல்வியை முன்னேற்றும் உந்து சக்தியாக இருக்கிறது.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: ஷிச்சின்பிங்கின் மற்றொரு அடையாளம்

இன்று, ஷி ச்சின்பிங்கும் பொது மக்களும் எனும் சிறப்பு நிகழ்ச்சியில், ஷிச்சின்பிங்கின் மற்றொரு அடையாளம் என்ற கதையை கூறுகின்றோம்.

2013ஆம் ஆண்டு, சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெரிய நண்பர் என்ற பெயரில், ஷிச்சின்பிங் நாடளவில் குழந்தைகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குழந்தைப் பருவம், ஒருவரின் ஆயுட்காலத்தில் மிக மதிப்புள்ள காலமாகும். குழந்தைகளுடன் சேர்ந்த போது, ஷிச்சின்பிங், தங்களது குழந்தைப் பருவ அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: ஷிச்சின்பிங்கின் மற்றொரு அடையாளம்

எடுத்துக்காட்டாக, 2014ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெய்ஜிங்கின் ஹாய்தியன் மாவட்டத்தில் உள்ள துவக்க பள்ளியில் குழந்தைகளுடன் ஷிச்சின்பிங் தனது இரண்டு சிறிய கதைகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது, மாணவர்கள் எழுதிய நான்கு எழுத்துக்களைப் பார்த்த பிறகு, ஷிச்சின்பிங் கூறியதாவது

குழந்தையாக இருந்த போது இந்த நான்கு எழுத்துக்களுடைய சொற்றொடர் என்னிடம் செல்வாக்கினை ஏற்படுத்தியது. 4, 5வயதில் அம்மா எனக்கு கதைப் புத்தகத்தை வாங்கி, வரலாற்றில் யுயேஃபெ என்பவர் நாட்டிற்கு விசுவாசத்தை வைத்து தன்னை தியாகம் செய்ததன் கதையை கூறினார். தற்போது, இக்கதை எனது நினைவில் நிற்கிறது என்று தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாடு நடைபெற்ற பிறகு, குழந்தைகளின் இல்லங்கள், மக்கள் மாமண்டபம், குழந்தைகள் நலன் மையம், நிலநடுக்கப் பகுதியில் தங்க வைக்கப்படும் முகாம் ஆகிய பல்வேறு இடங்களிலும், பெரிய நண்பரான ஷிச்சின்பிங் தனது சிறிய நண்பரான குழந்தைகளுடன், கூட்டாக சர்வதேச குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினார். இதுவே, குழந்தைகளின் மதிப்புள்ள நினைவு ஆகும். இந்த காட்சியில் இருந்து, புதிய தலைமுறையினர் மீது சீனாவின் அதியுயர் தலைவர் காட்டிய நம்பிக்கை உணரப்படலாம்.

இளைஞர்கள் வலிமை மிக்கவராக வளர்வது முக்கியமாது. நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைவதற்கு, அடுத்தடுத்த தலைமுறையினர் தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும். கடந்த முறையை விட நீங்கள் வலிமையாக வளர்ந்தால், நமது நாடு நாளுக்கு நாள் வலுமையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: ஷிச்சின்பிங்கின் மற்றொரு அடையாளம்

ஆசிரியர் தொழில் என்பது, மதிப்புமிக்க தொழில் ஆகும். 2016ஆம் ஆண்டு ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு, ஷிச்சின்பிங், தான் பயின்ற முன்னாள் பள்ளிக்குச் சென்றார். அப்போது, சென்ச்சியுயிங் உள்ளிட்ட பல ஆசிரியர்களுடன் சந்தித்துப் பேசி, பள்ளியில் இருந்த அனுபவங்களை நினைத்து மகிழ்ந்தார். அப்போது ஷிச்சின்பிங் கூறியதாவது

இன்று நான் பயின்ற பள்ளிக்கு மீண்டும் வருகிறேன். நட்பார்ந்த உணர்வு என்னுள்ளிருந்து எழுகிறது. இங்கு பழைய இடம் மற்றும் பழைய நினைவை தேடுகிறேன். தற்போது பள்ளி வளாகத்தில், மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நாள் ஞாபகத்தை மிகவும் நினைவு கூர்கிறேன். ஆசிரியர்களின் அறிவுறுத்தல், பள்ளியின் குறிக்கோள் ஆகியவை எமக்கு ஆழந்த செல்வாக்கினை ஏற்படுத்தி வருகின்றன. எங்கும் போனாலும், முன்னாள் பள்ளிகளை நினைத்து, தொடர்பு கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

காலம் பறந்து செல்கிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான ஆழந்த நட்புறவு எப்போதும் மாறாதே.

ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்: ஷிச்சின்பிங்கின் மற்றொரு அடையாளம்

நூற்றாண்டுக்கால இலட்சியத்தில் கல்வி ஊற்றுமூலம். ஆசிரியர், கல்வியின் ஊற்றுமூலம். ஒவ்வொரு குழந்தையும் நலமுடன் வளர்வது, மக்களுக்கு மனநிறைவு தரும் கல்விப் பணியை செவ்வனே செய்வது ஆகிய முக்கிய கடமைக்கு பொறுப்பேற்பவர்கள், ஆசிரியர்களே என்று ஷிச்சின்பிங் கருத்து தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டிற்கு பிறகு, கடிதம் எழுதி அனுப்புதல், கள ஆய்வு பயணம் மேற்கொள்தல், உரையாடல் ஆகியற்றிலும், ஷிச்சின்பிங்கின் சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் ஆசிரியர்கள் மீதான ஊக்கமும் நம்பிக்கையும் நிறைந்திருந்தன.

சிறந்த ஆசிரியர்கள், ஒருவருக்கு அதிர்ஷ்டமாகவும், ஆசிரியர்கள், ஒரு பள்ளிக்கு கௌரவமாகவும் விளங்குகின்றனர். ஒரு தேசத்தில் அடுத்தடுத்து வளர்ந்து வரும் சிறந்த ஆசிரியர்கள், தேசத்தின் நம்பிக்கையாக இருப்பர்கள் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்