ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்:புத்தாக்கம் குறித்து ஷி ச்சின்பிங்கின் கருத்துக்கள்

2019-02-09 15:59:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புத்தாக்கம், புதிய காலத்தில் சீனாவின் வளர்ச்சியை விவரிக்கும் முக்கிய வார்த்தை ஆகும். ஷி ச்சின்பிங் சீனாவின் சாதாரணப் பணியாளர்கள், தொழில் முனைவோர், அறிவியல் ஆய்வுப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து புத்தாக்கம் பற்றி விவாதம் செய்த போது கருத்துக்களை வழங்கினார்.

ஷி ச்சின்பிங்கும் பொது மக்களும்:புத்தாக்கம் குறித்து ஷி ச்சின்பிங்கின் கருத்துக்கள்

இன்று நீங்கள் இன்பமாக உணர்ந்து கொண்டிருக்கின்றீர்களா? இன்பம் அடைகின்றோம்

2018ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாள், கே லீ மின் கருவி கூட்டு நிறுவனத்தின் பணியாளர்கள் ஆரவாரமாக கரவொலி எழுப்பினர். இக்கூட்டு நிறுவனத்தில் சோதனை பயணம் மேற்கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷீ ச்சின்பிங் இக்கூட்டு நிறுவனத்தின் புத்தாக்க எழுச்சியைப் பாராட்டினார். தற்போது, கே லி கூட்டு நிறுவனம், சர்வதேச மயமாக்க தொழிற்துறை குழுமமாக வளர்ந்து வந்துள்ளது. இக்கூட்டு நிறுவனத்தில் உற்பத்தியாகும் அன்றாட வாழ்க்கை மின் கருவிகள், உயர் நிலை சாதனங்கள் மற்றும் செய்தித் தொடர்புச் சாதனங்கள், சீனாவிலும், 160க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் நன்கு விற்பனையாகி வருகின்றன. தற்சார்புப் புத்தாக்கத்தில் எப்போதும் ஊன்றி நிற்பது என்பது, இக்கூட்டு நிறுவனத்தின் வெற்றிக்கான திறவு கோலாகும்.

தற்சார்புப் புத்தாக்க ஆற்றலையும், இயக்கு ஆற்றலையும் அதிகரிக்கும் மனவுறுதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், புத்தாக்க வளர்ச்சியைத் தூண்ட முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் இக்கூட்டு நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பெரிய நாட்டிலிருந்து, வல்லரசு நோக்கி வளர்ந்து வரும் போக்கில், பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்றியமையாதது. எப்போதும் உண்மை நிலைமைக்கு இணங்க பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். ஆக்கத்தொழில், பொருளாதாரத்தில் உள்ள முக்கியமான பகுதியாகும். புத்தாக்கம், ஆக்கத்தொழிலின் மையமாகும் என்றார் அவர்.

ஷி ச்சின்பிங்கும் பொது மக்களும்:புத்தாக்கம் குறித்து ஷி ச்சின்பிங்கின் கருத்துக்கள்

இன்ஸ்பர் குழுமம், சீனாவில் முன்னேறிய நிலையில் இருக்கின்ற மேகக் கணிமை மற்றும் பெருந்தரவு சேவை நிறுவனமாகும். உலகளவில், நூற்றுக்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு தகவல் தொழில் நுட்ப உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை இக்கூட்டு நிறுவனம் வழங்குகிறது 2018ஆம் ஆண்டு ஜூன் திங்கள், இன்ஸ்பர் குழுமத்தின் உயர் நிலை கணினி உற்பத்தி தளத்தில் ஷீ ச்சின்பிங் சோதனை பயணம் மேற்கொண்டார். இக்கூட்டு நிறுவனம் சொந்தமாக ஆராய்ந்து தயாரிக்கும் உயர் நிலை சேவையகம், பெருந்தரவு, அரசாங்க மேகம், துடிப்பான நகரம் உள்ளிட்ட தகவல் மயமாக்க மேடையை அவர் விபரமாக அறிந்து கொண்டார். சோஷலிச அமைப்பு முறை, சக்திகளை குவித்து, முக்கிய பணிகளை மேற்கொள்ளும் மேம்பாடுகளை வெளிக்கொணர்த்து, புத்தாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் அப்போது சுட்டிக்காட்டினார்.

தியன் ஜின் மாநகரின் பின் ஹாய் பிரதேசத்தில் அமைந்துள்ள சுங் குவன் சுன் அறிவியல் தொழில் நுட்பப் பூங்காவில், நகரும் இணையம், பண்பாட்டு வளர்ச்சி, உயிரின மருத்துவம் மற்றும் மருந்து உள்ளிட்ட துறைகளிலான புதிய உயர் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இப்பூங்கா நிறுவப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், இப்பூங்காவில் நுழைந்துள்ள தொழில் நிறுவனங்களின் புத்தாக்கச் சாதனைகள் அதிகம் என்பது குறிப்படத்தக்கது. இவ்வாண்டின் துவக்கத்தில், ஷீ ச்சன்பிங் இப்பூங்காவில் சோதனை பயணம் மேற்கொண்டார். இப்பூங்கா, அவரது உள்நாட்டின் சோதனை பயணத்தின் முதலாவது இடமாகும்.

ஷி ச்சின்பிங்கும் பொது மக்களும்:புத்தாக்கம் குறித்து ஷி ச்சின்பிங்கின் கருத்துக்கள்

யீ ஃபெய் ச்சி குங் அறிவியல் தொழில் நுட்பக் கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் ட்சி ஜூன் துங், ஷீ ச்சின்பிங்கிற்கு இத்தொழில் நிறுவனத்தால் வளர்க்கப்பட்டு வரும் சர்வதேச முன்னேறிய நிலையில் இருக்கும் ஆளில்லா விமானங்களின் சுயக் கட்டுப்பாட்டு முறைமையைக் காட்சிக்கு வைத்தார்.

சீனக் கம்யூனிஸட் கட்சியும் அரசும் பல்வகை கொள்கைகளை ஆய்வு செய்து வகுத்து, புத்தாக்கத்துக்கு தரமிக்க சூழலை வழங்கும் என்று ஷீ ச்சின்பிங் தெரிவித்தார்.

தரமிக்க வளர்ச்சி மற்றும் நாட்டின் தொடரவல்ல வளர்ச்சிக்கு தற்சார்புப் புத்தாக்கம் இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பின், சீனாவின் பல்வேறு துறைகளில் புத்தாக்கம் செழிப்பாக வளர்ந்து வருகின்றது. புத்தாக்க ஆற்றலை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்து, சீனாவின் பண்டைக்கால இலக்கிய மேதை ச்சு யுவன் இயற்றிய லீ சாவ் எனும் இலக்கிய படைப்பில் உள்ள கவிதையை ஷீ ச்சின்பிங் மேற்கோள் காட்டி, குறிப்பிடுகையில்,

புத்தக்கப் போக்கில், ஆபத்தமான நிலைமை எப்போதும் நிலவுகிறது. இன்னல்களைச் சமாளித்து, வெற்றியை வென்றெடுக்கும் மனவுறுதியில் நாம் ஊன்றி நிற்க வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்