ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்:சீனாவின் தேசிய இன மக்கள் குறித்து ஷிச்சின்பிங்கின் கருத்துக்கள்

2019-02-10 18:14:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பல்வேறு தேசிய இன மக்கள், மாதுளையின் விதைகளைப் போன்று, நெருக்கமாக ஒன்றிணைய வேண்டும். அனைத்து தேசிய இன மக்களும், ஓரளவு வசதியான வாழ்க்கை நிலையை எட்ட வேண்டும். சீனாவின் பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைவது மற்றும் கூட்டு வளர்ச்சியின் மீது ஷிச்சின்பிங்கின் எதிர்பார்ப்பு இவையாகும். இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில், சீனாவின் தேசிய இன மக்கள் குறித்து ஷிச்சின்பிங்கின் கருத்துக்கள் பற்றிய அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அறிவிப்பாளர் மணிகண்டன்.

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் மொத்த நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்காகும். ஹான், உய்கூர், கசாக் உள்ளிட்ட 47 தேசிய இன மக்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள நிதானம் மற்றும் வளர்ச்சியில் ஷிச்சின்பிங் கவனம் செலுத்தி வருகின்றார். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பிறகு, ஷிச்சின்பிங், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதியிலுள்ள காஷ் நகருக்கு அவர் சென்றார். உய்கூர் இனத்தைச் சேர்ந்த அபுதுக்யும் ரோஸின் வீட்டில், கூடம், சமையலறை, ஆட்டுப் பட்டி, பழத் தோட்டம், வேளாண் கருவி ஆகியவற்றைப் பார்த்து, குடும்பத்தினர்களின் வாழ்க்கை தரத்தை அறிந்து கொண்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட சலுகைக் கொள்கை, பொது மக்களுக்கு நலன் தந்துள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது, இப்பயணத்தின் நோக்கமாகும். பொது மக்களின் விருப்பத்திற்கிணங்க, நமது கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய இன ஒற்றுமை பணியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலர் ஷிச்சின்பிங் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றார். அவர் கூறியதாவது,

தேசிய இன ஒற்றுமை, பல்வேறு தேசிய இன மக்களின் தேவையாகவும், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச வளர்ச்சியின் அடிப்படையாகவும் திகழ்கின்றது. இது, 130 கோடிக்கும் அதிகமான சீன மக்களின் கூட்டு விருப்பமாகும். கண்களைப் பாதுகாப்பதைப் போன்று, தேசிய இன ஒற்றுமையைப் பேணிக்காக்க வேண்டும். உயிர் மதிப்பைப் போன்று, தேசிய இன ஒற்றுமைக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இப்பின்னணியில், சீனாவின் பல்வேறு தேசிய இன மக்கள், மாதுளை விதை போன்று நெருக்கமாக ஒன்றிணைய வேண்டும் என்றார் அவர்.

நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சி ஹெய் கு பகுதி, சீனாவில் அதிகப்படியான வறுமை மக்களை கொண்ட பகுதியாகும். அங்குள்ள வறுமை ஒழிப்பு பணியின் மீது ஷிச்சின்பிங் தனிச்சிறப்பான உணர்வு கொண்டுள்ளார்.

1997ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்களில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஃபு ச்சியன் மாநிலத்தின் கட்சி குழுவின் துணை செயலாளரும், நிங் சியா ஹூய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திற்கு உதவி அளிக்கும் பணிக் குழுவின் தலைவருமான ஷிச்சின்பிங், நின் சியாவில் பயணம் மேற்கொண்டு. ஃபுச்சியன், நின்சியா ஆகிய இரு மாநிலங்களின் பெயர்களின் சார்பாக மின் நிங் என்ற ஊரை, வறுமை ஒழிப்பு ஒத்துழைப்பு திட்டப்பணிக்காக அவர் உருவாக்கினார். அப்போது 8000க்கு அதிகமான வறுமையான மக்களைக் கொண்டிருந்த மின் நிங் ஊர், 20 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது 60 ஆயிரம் மக்களைக் கொண்ட மின் நிங் வட்டமாக வளர்ந்துள்ளது. பாலைவனத்தில் அமைந்துள்ள மின் நிங் ஊர், தண்ணீர், சாலை, மின்னாற்றல் ஆகிய வசதிகளைக் கொண்ட நவீனமயமாக்க வட்டமாக மாறியுள்ளது. இங்கு நிகழ்ந்த பெருமளவான மாற்றங்களைப் பார்த்த ஷிச்சின்பிங் கூறியதாவது,

20 ஆண்டுகாலத்தில், மின் நிங் ஊர், மின் நிங் வட்டமாக வளர்ந்துள்ளது. நபர்வாரி வருமானம், 500 யுவானிலிருந்து 10 ஆயிரம் யுவானாக உயர்ந்து, 20 மடங்கு அதிகரித்துள்ளது. நீங்கள் இன்பமாக வாழ்வதைப் பார்க்கும் போது எனக்குள் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்