ஷிச்சின்பிங்கும் பொது மக்களும்:லாவ்மா என்றழைக்கப்படும் மாஷான்சியாங்கிற்கு பாராட்டு

ஜெயா 2019-02-11 10:38:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷி ச்சின்பிங்கும் பொது மக்களும்:தோழர் லாவ்மாவுக்கு பாராட்டுக்கள்

2018ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி, அரசவையால் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய நூறு பேர் பாராட்டப்பட்டனர். அவர்களுள் ஒருவரே தோழர் லாவ்மா என்றழைக்கப்படும் மாஷான்சியாங். இவர், அடிப்படைச் சமூக நிர்வாகப் புத்தாக்கத்தில் சிறந்த இணக்கத்தை மேற்கொண்ட சீர்திருத்த முன்னோடி என்ற புகழைப் பெற்றுள்ளார். இப்பணிக்காக அவர், பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கினால் பெரிதும் பாராட்டப்பட்டார். கடந்த பல ஆண்டுகளாக, அவர் தன் வீட்டிற்கு அருகிலுள்ள மக்களின் சர்ச்சையைத் தீர்த்து இன்னல்களைச் சமாளிக்க உதவி செய்து வருகிறார். இன்றைய “ஷி ச்சின்பிங்கும் பொது மக்களும்”எனும் சிறப்பு நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் தோழர் லாவ்மாவைப் பாராட்டிய கதை பற்றிக் கூறுகின்றோம்.

என் பெயர் மாஷான்சியாங், சோங்ட்சிங் மாநகரின் ஜியாங்பெய் குவான்யின்சியேள பாதையின் லாவ்மா அலுவலகத்தின் பொறுப்பாளர். மக்கள் பணியில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். மொத்தமாக 160க்கும் மேலான பணிக்குறிப்பேடுகளை எழுதியுள்ளேன். தொகுத்து இணக்கம் செய்த வழிமுறைகளின் எண்ணிக்கை 60க்கும் மேலாகும் என்று லாவ்மா செய்தியாளரிடம் கூறினார்.

ஷி ச்சின்பிங்கும் பொது மக்களும்:தோழர் லாவ்மாவுக்கு பாராட்டுக்கள்

2018ஆம் ஆண்டு சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி மற்றும் சீனாவின் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர்களின் காலத்தில், பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் சோங்ட்சிங் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில் கலந்து கொண்ட போது, தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக முதல்முறையாகத் தேர்ந்தெடுப்பட்ட மாஷான்சியாங், பொதுச் செயலாளரிடம் சொந்தமான அடிப்படை இணக்கப் பணியில் ஈடுபட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டார்..

மாஷான்சியாங் 1988ஆம் ஆண்டு ஒரு பிரச்சினையை இணக்கமாகத் தீர்த்து முதல், கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் சந்தித்த இன்னல்களைச் சமாளிக்க அவர் உளமார்ந்த முறையில் உதவி செய்து வருகிறார். அவர் வெற்றிகரமாக இணக்கம் செய்த சர்ச்சைகளின் எண்ணிக்கை 2000க்கும் மேலாகும். மக்களின் பிரச்சினைகளைச் சமாளிக்க, சரியான புள்ளியைத் தேட வேண்டும் என்று அவர் கூறினார்.

அடிப்படையில் வீட்டு இடிப்பு, நகர் நிர்வாகம், குடும்பச் சொத்து சர்ச்சை முதலிய மக்களின் முரண்பாடுகளை அடிக்கடிச் சந்தித்துள்ளோம். இவை, இணக்கம் செய்யும் ஆற்றலுக்கான கோரிக்கை மிக உயரமாக இருக்கிறது. நெடுஞ்சாலைக்கும் அதற்கு அருகிலிருந்த 22 கடைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை இணக்கம் செய்த அனுபவம் எனக்கு உண்டு. அப்போது, நூற்றுக்கும் மேற்பட்டோருடன் அது தொடர்புடையது. நாம் இந்த முரண்பாட்டைச் சிறப்பாக இணக்கம் செய்துள்ளோம். வளர்ச்சிப் பிரச்சினைகளைச் சமாளிப்பதோடு, நல்லிணக்கப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஷிச்சின்பிங் உணர்வுடன் கூறுகையில், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசக் கட்டிடத்துக்கு தூண்கள் வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, அதில் எலும்பாக விளங்கியது. கட்சி மத்தியக் கமிட்டி முக்கியத் தூணும் ஆகும். அதோடு, உறுதியான அடிப்படையும் தேவைப்படுகிறது என்று கூறினார்.

ஷி ச்சின்பிங்கும் பொது மக்களும்:தோழர் லாவ்மாவுக்கு பாராட்டுக்கள்

நம்முடைய அடி மட்டத்தை வலுப்படுத்த வேண்டும். அடிப்படை உறுதியாக இல்லா விட்டால், தரையும் மலையும் தட அசையும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் முன்மாதிரியாக பங்காற்றும் தோழர் லாவ்மாவைப் போன்ற ஆயிரக்கணக்கான அடி மட்ட ஊழியர்கள், நமக்குத் தேவைப்படுகிறார்கள். தோழர் லாவ்மா பல்வேறு பணிகளைச் செவ்வனே செய்து, நல்ல சாதனைகளைப் பெற விரும்புவதாக ஷிச்சின்பிங் கூறினார்.

தோழர் லாவ்மாவை பொதுச் செயலாளர் பாராட்டிய கதையை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாஷான்சியாங், மக்களுக்கு சேவை புரியும் கதையை தொடரந்து வழங்குகின்றோம். அவர், ஆயிரக்கணக்கான அடி மட்டப் பணியாளர்களும், பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் கோரிக்கையின்படி பணி செய்து வருகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி, மக்களுக்குச் சேவை புரியும் அரசியல் கட்சியாகும். மக்களுக்கான விடயங்கள் சிறிய விடயங்கள் அல்ல. பொது மக்களின் பல்வேறு விடயங்களைச் செவ்வனே செய்ய வேண்டும். பெரும்பாலான பணிகள் அடி மட்ட நிலையில் உள்ளன. அடி மட்ட நிர்வாகத்தைச் சீர்திருத்தம் செய்து, புத்தாக்க பணியை மேற்கொள்ள வேண்டும். நிர்வாக ஆற்றலை உயர்த்தி, மக்களுக்கு மேலும் சிறப்பாகச் சேவை புரிய வேண்டும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்