நானும் எனது தாய்நாடும் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சி

ஜெயா 2019-02-11 13:59:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நானும் எனது தாய்நாடும் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சி

நானும் எனது தாய்நாடும் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சி

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது தாய்நாடும் எனும் பிரபலமான பாடலாகும். தாய்நாட்டின் மீது சீன மக்களின் ஆழ்ந்த உணர்வு இப்பாடலில் பாடப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பாடலைக் கேட்டு வளரும் தலைமுறைத் தலைமுறையான சீனர்கள், நாட்டுப்பற்று உணர்வுடனும் தேசிய ஆற்றலை வலுப்படுத்தும் இலக்குடனும், தாய்நாட்டைக் கட்டியமைக்கும் பல்வேறு பொறுப்புகளில் வேலை செய்கின்றனர். 2019ஆம் ஆண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். வசந்த விழாக் காலத்தில், சீன ஊடகக் குழுமம் திடீர் கலை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. பெய்ஜிங், ஷென்சேன், சியாமென், வூஹான், செங்து, சாங்ஷா முதலிய 8 நகரங்களில், மக்கள் உரத்த குரலில் “நானும் எனது தாய்நாடும்” எனும் பாடலைப் பாடி, தாய்நாட்டுக்கான அன்பு மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பிப்ரவரி 10ஆம் நாள், ஹுநான் மாநிலத்தின் சாங்ஷா மாநகரிலுள்ள சுசிசோதோ எனும் இடத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக் கொடியை அசைத்து, கூட்டாக “நானும் எனது தாய்நாடும்” எனும் பாடலைப் பாடினர். நிகழ்ச்சிக்குப் பின், அனைவரின் மனதிலும் உற்சாகமான உணர்வு நிலைத்து இருக்கும்.


நானும் எனது தாய்நாடும் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சி

நானும் எனது தாய்நாடும் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சி

“மிகவும் மிகழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.”

“தாய்நாடு மிக வலுமையாக இருக்கிறது. அதனால் நாங்கள் இன்பமாக வாழ்கிறோம்.”

“தாய்நாடு மென்மேலும் வளமாகவும் செழுமையாகவும் மாற வாழ்த்துக்கள்.”

“சீனாவை நான் காதலிக்கிறேன்.”

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, பிப்ரவரி 3ஆம் நாள் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற முதல் திடீர் கலை நிகழ்ச்சியின் ஒலியாகும். அன்று, சீன ஊடகக் குழுமத்தின் சீனத் தொலைக்காட்சி நிலையத்தின் பல பொறுப்பாளர்கள் மற்றும் சீன ஆய் யுவே இசைக்குழுவின் தலைமையில், சுறுசுறுப்பான பயணிகள், கூட்டாக இந்தப் பாடலைப் பாடினர்.

நானும் எனது தாய்நாடும் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சி

நானும் எனது தாய்நாடும் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சி

தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்ற திடீர் கலை நிகழ்ச்சிகளில், தைவான், ஹாங்காங் முதலிய இடங்களைச் சேர்ந்த பாடகர்கள் கலந்து கொண்டனர். தவிர, மாணவர்கள், விளையாட்டு வீரர்களும் இதில் பங்கெடுத்தனர்.

பிப்ரவரி 10ஆம் நாள், வசந்த விழா விடுமுறையின் கடைசி நாளாகும். சீனர்கள் பலர் வீடுமுறையை முடித்து கொண்டு, வேலைக்கு திரும்பினர். புதிய யுகத்தில் கனவைத் தொடர்ந்து தேடி, முயற்சி மேற்கொண்டு, மேலும் அருமையான எதிர்காலத்தை வரவேற்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்