உலகளவில் சீனாவின் செல்வாக்கு

வாணி 2019-03-15 16:53:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகளவில் சீனாவின் செல்வாக்கு

உலகளவில் சீனாவின் செல்வாக்கு

கேலுப் என்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற பொது மக்கள் கருத்து கணிப்பு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட புதிய ஆய்வு அறிக்கையின்படி, உலகளவில் சீனாவின் தலைமையாற்றலுக்கான ஆதரவு விகிதம் 34 விழுக்காடும், அமெரிக்கா 31 விழுக்காடு ஆதரவு பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி நிகழ்ந்த பிறகு சீனாவின் தலைமையாற்றலுக்கான ஆதரவு விகிதம் மீண்டும் அமெரிக்காவைத் தாண்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, பசுமை, திறப்பு, பகிர்வு ஆகியவை படைத்த புதிய வளர்ச்சி கருத்தைச் சீனா கடைபிடித்து வருகிறது. ஆண்டுதோறும் சீனாவில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இதுவரை 123 நாடுகளும் 29 பன்னாட்டு அமைப்புகளும் சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன. இது உலகளவில் கூட்டு வெற்றி பெறக் கூடிய மிக பெரிய மேடையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலுப் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் கிரிப்டன் இந்த ஆய்வு அறிக்கையில் கூறியதைப் போல், கடுமையான சக்தி ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் இராணுவ வலிமை என்றால், மென்மையான சக்தி ஒரு நாட்டின் மறைமுகச் சக்தியாகும். அதாவது, மக்கள் உங்களுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பதற்குப் பதிலாக உங்களுடன் இணைந்து செல்ல விரும்புகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்