சீனாவின் பொருளாதாரத்தின் மீது முழு நம்பிக்கை:லீ கேச்சியாங்

வாணி 2019-03-15 17:30:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பொருளாதாரத்தின் மீது முழு நம்பிக்கை:லீ கேச்சியாங்

சீனாவின் பொருளாதாரத்தின் மீது முழு நம்பிக்கை:லீ கேச்சியாங்

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 15ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். சந்தையின் உயிர் ஆற்றலை அதிகரித்து, சந்தையின் புத்தாக்கத் திறனை வெளிப்படுத்துவதன் மூலம் சீனப் பொருலாதாரத்தின் சீரான இயக்கத்துக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும், தரமான வளர்ச்சி பெறவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு, சீன அரசு புதிய எதிர்மறையான பெயர்ப்பட்டியலை வெளியிடு, அறிவுசார் சொத்துரிமைக்கான பாதுகாப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, வெளிநாட்டுத் திறப்பைத் தொடர்ந்து விரிவாக்கி வருகிறது என்று சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தை சீனா திருத்தும். சுயவிருப்பத்தின் அடிப்படையில் சீனத் தொழில் நிறுவனங்களுக்கும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை வெளிநாடுகளின் அரசுகள் நியாயமாக அணுக வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


வேலை வாய்ப்பு நிலைமை, சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய காரணியாகும் என்று லீ கேச்சியாங் தெரிவித்தார். இவ்வாண்டில், நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் ஒரு கோடியே 10 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.

சீன-அமெரிக்க உறவு பற்றி குறிப்பிடும் போது, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிப் போக்கு மாறவில்லை. இரு தரப்புகளுக்கிடையில் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடரும். இதன் மூலம் சீனாவும் அமெரிக்காவும் கூட்டுப் பயன்களைப் பெற வேண்டும் என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்