​வரியைக் குறைக்கும் பணியின் முக்கியத்துவம்:சீனத் தலைமையமைச்சர்

தேன்மொழி 2019-03-22 09:27:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வரியைக் குறைக்கும் பணியின் முக்கியத்துவம்:சீனத் தலைமையமைச்சர்

வரியைக் குறைக்கும் பணியின் முக்கியத்துவம்:சீனத் தலைமையமைச்சர்

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங், 21ஆம் நாள், சீன நிதி அமைச்சகத்திலும் சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகத்திலும் பணியைச் சோதனையிட்டு, கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

வரிகுறைப்பு அளவை மேலும் விரிவாக்குவது, இவ்வாண்டின் அரசுப்பணி அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள முக்கிய பணியாகும். இது தொடர்பாக, லீக்கெச்சியாங் கூறுகையில், இவ்வாண்டில் பொருளாதார வீழ்ச்சி அடையாமல் தடுக்கத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும், புதிய யுகத்துக்கான ஷிச்சின்பிங்கின் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையை வழிக்காட்டலாகக் கொண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வரியைக் குறைப்பதன் மூலம், தொழில் நிறுவனங்களின் இயக்காற்றலை மேலும் வெளிப்படுத்தி, பொருளாதாரச் செயலை உரிய அளவில் நிலைநிறுத்தி, தரமிக்க வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்