தண்ணீர் மூலவளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சீனாவின் முயற்சி

மதியழகன் 2019-03-22 18:43:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் நாள், உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சீனாவில், மக்கள் தொகை அதிகம். ஆனால், தண்ணீர் மூலவளம் குறைவு. சீனாவில் நபர்வாரி தண்ணீர் வளம், உலகின் சராசரி நிலையின் 30 விழுக்காட்டுக்கு குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறைகூவலைச் சமாளிக்கும் விதம், சீனாவில் மிக கண்டிப்பான தண்ணீர் மேலாண்மை முறைமை நடைமுறையில் உள்ளது.

தண்ணீர் மூலவளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சீனாவின் முயற்சி

அன்று, சீன அரசவைச் செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீன நீர்வளத் துறைத் துணை அமைச்சர் வெய் ஷான்சோங் கூறுகையில்,

தண்ணீர் மூலவளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, பாதுகாப்பது, மேலாண்மை செய்வது ஆகிய துறைகளில் சீனா ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், தண்ணீர் வளத்தின் தொடரவல்ல பயன்பாட்டையும், பொருளாதார வளர்ச்சி வழிமுறையின் மாற்றத்தையும் முன்னெடுப்பதில், தெளிவான சாதனைகளைப் படைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

2012ஆம் ஆண்டு இருந்ததை விட, 2017ஆம் ஆண்டு ஒவ்வொரு 10ஆயிரம் யுவான் உற்பத்தி மதிப்புக்கும் தண்ணீர் பயன்பாடு, 30 விழுக்காடு குறைந்துள்ளது. முக்கிய ஏரிகள் மற்றும் ஆறுகளின் தண்ணீர் விநியோகப் பகுதிகளில் தரமான தண்ணீர் விகிதம், 63.6 விழுக்காட்டில் இருந்து 76.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல கட்டுப்பாட்டு இலக்குகள் சுமுகமாக நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு தண்ணீர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சமூகத்தை சீனா முனைப்புடன் உருவாக்கி வருகிறது. அதில், தண்ணீரை அதிகமாக செலவு செய்து வரும் தொழிற்துறையின் தொழில் நுட்பங்கள் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயத்தில், தண்ணீர் வளங்களின் பங்கீட்டுப் பணிக்கான மேலாண்மை நிலையும் தெளிவாக மேம்பட்டுள்ளது.

சீனாவின் வடக்குப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, வெய்ஷான்சோங் செய்தியாளர் கூட்டத்தில் பதில் அளிக்கையில்,

வடக்ப்பகுதியில், மக்கள் தொகை 16.8 கோடி உள்ளது. ஆனால், அங்குள்ள மொத்தத் தண்ணீர் அளவு, நாட்டில் 4 விழுக்காடு மட்டும் வகிக்கிறது. நிலத்தடித் தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்தி வருவதன் காரணமாக, வடக்குப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பெரிதும் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் சேமிப்பில், 18000 கோடி கனமீட்டர் பற்றாக்குறை நிலவுகிறது. இது, உயிரினச் சூழலுக்கு தீங்குகளை விளைவித்துள்ளது என்று தெரிவித்தார்.

நீர் பற்றாக்குறை நிலையை தணிவுபடுத்தும் வகையில், தற்போது, நிலத்தடித் தண்ணீர் சேமிப்புத் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு, ஹெபெய் மாநிலத்தில், 88 கோடி கனமீட்டர் நிலத்தடித் தண்ணீர் கூடுதலாக சேமிக்கப்பட்டது. நீர் மட்டம் தெளிவாக உயர்ந்துள்ளது. மேலும், இரண்டு கட்டங்களாக இலக்குகளைச் செயல்படுத்துவதன் மூலம், இறுதியில் பெய்ஜிங், தியன்ஜின், ஹெபெய் ஆகிய பகுதிகளின் நிலத்தடித் தண்ணீர் மூலவளத்தின் பயன்பாட்டிற்கும் சேமிப்புக்கும் இடையே சமநிலையை எட்ட முயற்சி செய்கின்றோம் என்று வெய் ஷான்சோங் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்