சீனாவின் மேலும் உயர் தரமான திறப்புகளை விரிவாக்கும் ஐந்து நடவடிக்கைகள்

கலைமகள் 2019-04-26 23:02:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கருத்தரங்கின் 2ஆவது கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் கூட்டுக் கட்டுமானத்தை உயர்தரமான வளர்ச்சித் திசை நோக்கித் தொடர்ந்து முன்னேற்றுவதை வலியுறுத்தி, எதிர்காலத்தில் மேலும் உயர்தரமான திறப்புகளை விரைவுபடுத்தும் வகையில் சீனா மேற்கொள்ளும் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தார்.

மேலும் பெருமளவில் வெளிநாட்டு முதலீடு சீனச் சந்தையில் நுழைவதற்கு அனுமதி அளிப்பது, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பில் சர்வதேச ஒத்துழைப்பை பெரிதும் வலுப்படுத்துவது, வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைத் துறையிலான இறக்குமதியை மேலும் அதிகரிப்பது, சர்வதேச ஒட்டு மொத்த பொருளாதாரக் கொள்கை மீதான ஒருங்கிணைப்பைப் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவது, வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை நிறைவேற்றுவதில் மேலும் கவனம் செலுத்துவது ஆகியவை இந்த ஐந்து நடவடிக்கைகளில் இடம் பெற்றுள்ளன. மேலும் உயர்தரமான வெளிநாட்டு திறப்பை நிறைவேற்றுவதில், சீனா, சரியான கொள்கை மற்றும் கருத்துக்களைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தையும் செயல்பாட்டையும் கொண்டுள்ளதை இந்த நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

சீனா வழங்கிய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி, வரைவுத்திட்டக் கட்டத்திலிருந்து செயல்பாட்டுக் கட்டத்திற்குள் நுழைந்து வருகிறது. சீனா மேலும் உயர்தரமான திறப்பை விரைவுபடுத்துவது, இத்திட்டத்துக்கு வலுவான உந்து சக்தியை வழங்கி, பொருளாதார உலகமயமாக்கத்துக்கு மேலதிக புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும். வேகமாக வளர்ச்சியடைய விரும்புபவர்கள் அனைவரும், இந்த நல்ல வாய்ப்பைக் கைப்பிடித்து சீராக பயன்படுத்த வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்