அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது சுங்க வரி அதிகரிப்பு:சீனா

இலக்கியா 2019-05-13 22:11:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது சுங்க வரி அதிகரிப்பு:சீனா

2019ஆம் ஆண்டு மே 10ஆம் நாள் முதல், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களின் மீதான சுங்க வரி 10 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டாக அதிகரிக்க அமெரிக்கா அறிவித்துள்ளது. இச்செயல், இரு தரப்பின் நலன்களுக்குத் தீங்கு விளைவித்ததோடு, சர்வதேசச் சமூகத்தின் பொது எதிர்பார்ப்பையும் மீறியுள்ளது. பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையையும் சீனாவின் சட்டப்பூர்வ நலன்கள் மற்றும் உரிமையையும் பாதுகாக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஒரு பகுதி பொருட்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க சீனா தீர்மானித்துள்ளது. ஜுங் முதலாம் நாள் முதல், 6 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களின் மீது முறையே 25 விழுக்காடு, 20 விழுக்காடு, 10 விழுக்காடு மற்றும் 5 விழுக்காடு என்ற சுங்க வரி வசூலிப்பதென சீன அரசவையின் சுங்க வரி ஆணையம் 13ஆம் நாள் அறிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்