ஹங்ஜோவில் 3ஆவது சர்வதேச தேயிலைப் பொருட்காட்சி

பண்டரிநாதன் 2019-05-16 16:05:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மூன்றாவது சீனச் சர்வதேச தேயிலைப் பொருட்காட்சி, சேஜியாங் மாநிலத்தின் ஹங்ஜோவில் 15 ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இப்பொருட்காட்சியின் தலைப்பு தேயிலையும் உலகும், வளர்ச்சிப் பகிர்வு என்பதாகும். 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பொருட்காட்சியில் 3,319 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முந்தைய தேயிலைப் பொருட்காட்சியுடன் ஒப்பிடுகையில் இது 18 விழுக்காடு அதிகம்.

வேளாண்மை மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சர் டங் கே கூறுகையில், பிரிட்டன், நியூஸிலாந்து, இந்தியா, இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கொள்வினைஞர்கள் இப்பொருட்காட்சியில் பங்கேற்பதற்குப் பதிவு செய்துள்ளனர் என்றார். இப்பொருட்காட்சியின்போது, சீனா மற்றும் மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர் நிலையிலான கூட்டமும், சர்வதேச தேயிலை மாநாடும் நடைபெற உள்ளன.

உலக அளவில் மிக அதிகமாகத் தேயிலை உற்பத்தி செய்யும் நாடாகவும், பெரும் சந்தையாகவும் சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்