சீனாவின் புதிய சுரங்கத் தானியங்கி தொடர்வண்டிகள்

பூங்கோதை 2019-06-20 11:26:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் CRRC பங்கு நிறுவனத்தைச் சேர்ந்த சி ஃபாங் பங்கு நிறுவனம் ஆராய்ந்து தயாரித்துள்ள 6 சுரங்கத் தொடர்வண்டிகள் அடங்கிய புதிய தொகுதி அண்மையில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் மூலப்பொருட்கள் இச்சுரங்கத் தொடர்வண்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. “எதிர்காலச் சுரங்கத் தொடர்வண்டி” என்று அழைக்கப்படும் இத்தொகுதி, எதிர்காலத்திலுள்ள சுரங்கத் தொடர்வண்டி தொழில் நுட்பத்தின் கால ஓட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

குறைவான எடை, எரியாற்றலை மேலும் சிக்கனப்படுத்துவது ஆகியவை, இந்தப் புதிய சுரங்கத் தொடர்வண்டியின் முக்கிய தனிச்சிறப்பாகும். அதன் உச்சவரம்பு வேகம் மணிக்கு 140 கிலோமீட்டராகும். இது முழுமையான தானியங்கி தொடர்வண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்