சீனாவில் விலைவாசிக் குறியீட்டு மாற்றம்

மதியழகன் 2019-07-10 16:59:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் ஜுன் திங்களில், நாடு முழுவதிலும், சிபிஐ எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண், கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 2.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் 6 திங்களில், இந்த குறியீட்டு எண், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 10ஆம் நாள் தகவலை வெளியிட்டது.

கடந்த காலத்தில், சீனாவின் பல இடங்களில், பழங்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளமை அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அன்று வெளியான புள்ளிவிவரங்களின்படி, ஜுன் திங்களில் பழங்களின் விலை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 42.7விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், இறைச்சி விலை, 14.4விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பற்றி சீன அரசவையின் ஆலோசகர்கள் அலுவலகத்தின் ஆய்வாளர் யாவ்ஜிங்யுவான் கூறுகையில், பருவ மாற்றம் மற்றும் ஆப்பிரிக்க பன்றி நோய் உள்ளிட்ட காரணிகளின் பாதிப்புகளால், நுகர்வோர் விலை குறியீட்டு எண் தொடர்ந்து 2 விழுக்காட்டுக்கு மேலாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இருப்பினும், விலை உயர்வு, இன்னும் முன்பு கணிக்கப்பட்ட அளவிற்குள் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அன்று, பிபிஐ எனப்படும் உற்பத்தியாளர் விலை குறியீட்டு எண் தொடர்பான புள்ளிவிவரங்களை, தேசிய புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டது. இவ்வாண்டின் முன்பாதியில், இந்த குறியீட்டு எண், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.3விழுக்காடு அதிகரித்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், எண்ணெய் தொடர்பான தொழில்களில் விலை குறைவு ஏற்பட்டது. இரும்பு உற்பத்தி அளவு பெருமளவில் அதிகரித்துள்ளதால், சந்தையில் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால், உற்பத்தியாளர் விலை குறியீட்டு எண் குறைந்தது என்று கருதப்படுகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஒட்டுமொத்த பொருளாதார ஆய்வுப் பிரிவின் ஆய்வாளர் சாங் லீச்சுன், உற்பத்தியாளர் விலை குறியீட்டில் காணப்படும் சிறிய மாற்றம் கவனிக்கத்தக்கது என்று கூறினார்.

இவ்வாண்டின் பிற்பாதியில், சிபிஐ மற்றும் பிபிஐ குறியீடுகள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு சாங் லீச்சுன் பதில் அளிக்கையில்,

பிற்பாதியில் ஒட்டுமொத்த பார்வையில், சிபிஐ குறியீடு நிலையாக காணப்படும். ஆனால், இந்த குறியீட்டு எண் குறைய வாய்ப்புள்ளது. பிபிஐ குறியீடு ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையின் எண்ணிக்கை மற்றும் திசையுடன் தொடர்புடையது. உள்நாட்டுத் தேவையை விரிவாக்குதல் உள்ளிட்ட கொள்கைகள் ஆக்கப்பூர்வமான பயன் பெற்றால், பிபிஐ படிப்படியாக உயர்ந்து வரும் என்று கருத்து தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்