சரக்குக் கப்பல் போக்குவரத்தின் எதிர்கால வளர்ச்சி

மதியழகன் 2019-07-11 16:27:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆண்டுதோறும் ஜுலை 11ஆம் நாள், சீனாவின் புகழ்பெற்ற மாலுமிச் செங் ஹெ தொலைத்தூரக் கடல் பயணத்தை தொடங்கியதன் நினைவு நாள் ஆகும். இது, சீனாவின் 15ஆது கடல் பயணத் தினமாகவும் திகழ்கிறது. இதை முன்னிட்டு, சீனக் கடல் பயணத் தினம் பற்றிய கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

துறைமுகங்களின் சரக்குகள் மற்றும் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறனில், சீனா 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், சீனாவின் சரக்குக் கப்பல் அணிகளின் எண்ணிக்கை உலகின் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட சீனப் போக்குவரத்துத் துறையின் துணை அமைச்சர் லியூ சியாவ்மிங் இந்த கருத்தரங்கில் தெரிவித்தார். சரக்குக் கப்பல் போக்குவரத்துத் துறையில், தற்போது சீனா பெரிய நாடாக மட்டுமே திகழ்கிறதே தவிர, வல்லரசாக அல்ல என்று குறிப்பிட்டார் அவர்.

இத்துறையின் தரமிக்க வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இத்துறைக்கான அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

இத்துறையைப் புதுமையாக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு, 5ஆம் தலைமுறை நகரும் தொலைத் தொடர்பு, பெய்டோ புவியிடங்காட்டி அமைப்புமுறை உள்ளிட்ட உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் போக்கை விரைவுபடுத்த வேண்டும். அதன் மூலம் கப்பல் போக்குவரத்தின் நுண்ணறிவு நிலையை பெரிதும் மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்துத் துறையில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்து, துறைமுகங்களில் தொழில் புரிவதற்கான சூழலை தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டும் என்றும் லியூ சியாவ்மிங் ஆலோசித்தார்.

சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைமை செயலாளர் கீடாக் லீம் அன்று கருத்தரங்கில் பேசுகையில், கப்பல் போக்குவரத்தின் அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம் மற்றும் தூய்மையான வளர்ச்சி ஆகியவற்றில் சீனா முக்கிய பங்கு ஆற்றி வருகிறது என்று பாராட்டு தெரிவித்தார்.

தற்போது, சீனா முன்வைத்துள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானமானது, கப்பல் போக்குவரத்தின் சர்வதேச மயமாக்கத்தை முன்னெடுக்கும் முக்கியத் தளமாக மாறியுள்ளது. உலகின் தடையற்ற துறைமுகமாகவும், கடல்வழி பட்டுப் பாதையின் நெடுகிலுள்ள முக்கிய நாடாகவும் இருக்கும் சிங்கப்பூர், கடல்சார் மற்றும் துறைமுக ஆணையத் தலைவர் க்வா லிய் ஹோன், எண்முறை மற்றும் தூய்மை வளர்ச்சி வழிமுறை ஆகியன கடல்வழிப் பட்டுப் பாதைக் கட்டுமானத்தில் ஒன்றுடன் ஒன்றிணைவதற்கான திறவு கோல் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்