சீனாவில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான பணி

பூங்கோதை 2019-07-12 09:50:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது மற்றும் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான பணிக்குழு கூட்டத்துக்கு சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் அண்மையில் தலைமைத் தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் இந்தப் பணி குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் வேதியியல் இல்லாத எரியாற்றல்களின் நுகர்வு விகிதம் உயர்ந்து வருகிறது. மேலும், சீனாவின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் மின்னாக்கிகளின் மொத்த ஆற்றல், உலக அளவில் 30 விழுக்காட்டை வகித்துள்ளது. புதிதாக அதிகரிக்கப்படும் காட்டு மரங்களில் மொத்த இருப்பு, 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை முன்கூட்டியே நனவாக்கியுள்ளது என்றார்.

மேலும், சீனா, உலகத்திலுள்ள மிகப் பெரிய வளரும் நாடாகும். 2030ஆம் ஆண்டு அளவில், கரியமில வாயு வெளியேற்றம் பெருமளவில் குறைக்கப்படுவது என்ற சீனாவின் வாக்குறுத்தியை நிறைவேற்றும் வகையில், சீனா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்