​தேசியக்கொடியைப் பாதுகாக்கும் பணியில் ஜாக்கி சான்

தேன்மொழி 2019-08-14 15:08:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் புகழ்பெற்ற நடிகரான ஜாக்கி சான் அண்மையில் சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களின் வன்முறைச் செயல், தனக்கு வருத்தத்தையும் கவலையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 140கோடி மக்கள் தேசியக்கொடியைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம், ஒரு சீனராகவும், ஹாங்காங் வாசிகளுள் ஒருவராகவும், சீனர்களில் ஒருவராகவும் திகழும் நான், எனது நாட்டுப் பற்று உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிவித்தார். அதோடு, இந்நடவடிக்கை மூலம், மக்கள் தேசியப்க்கொடியின் பாதுகாவலர்கள் என்ற அனைவரின் கூட்டுக் குரல் வெளிப்படுத்தப்படும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

தவிரவும், பாதுகாப்பு, நிதானம் மற்றும் அமைதி ஆகியவை, காற்று போன்றது, அது இருக்கும் போது அதன் அருமை தெரியாது. குறையும்போதே அதை முழுமையாக உணரமுடியும் என்று குறிப்பிட்ட அவர், ஹாங்காங், என்னுடைய சொந்த ஊர், சீனா என்னுடைய தாய்நாடு. நான், தாய்நாட்டின் மீதும் சொந்த ஊரின் மீதும் நான் பற்றுக்கொண்டுள்ளேன். ஹாங்காங் வெகுவிரைவில் நிதானத்துக்குத் திரும்ப வேண்டும் என விரும்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்