சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்

சிவகாமி 2019-08-21 11:09:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம் ஆகஸ்ட் திங்கள் 21ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். தென்கொரிய வெளியுறவு அமைச்சர் கியுங் வா கங், ஐப்பானிய வெளியுறவு அமைச்சர் டாரோ கொனோ ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாண்டு, சீனா ஜப்பான் தென்கொரியா நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். இதையொட்டி நடத்தப்பட்ட மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இக்கூட்டத்தில் மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு, மூன்று நாடுகளின் அரசுத் தலைவர்களின் 8ஆவது கூட்டத்துக்கான ஆயத்தம், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர் என்று தெரிய வருகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்