வர்த்தகப் பாதுகாப்பு வாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

வாணி 2019-08-25 19:01:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுடனான வர்த்தகச் சர்ச்சையைத் தீவிரமாக்கும் அதேவேளையில், சீனாவில் தொழில் செய்து வரும் அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அண்மையில் அந்நாட்டில் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய உலகில் நாடு கடந்த தொழில் நிறுவனங்கள் கூடுதலாக லாபம் பெறும் வகையில், சந்தைப் பொருளாதார விதிகளின்படி உலகளவில் மூலவளங்களை ஒழுங்குப்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மேற்கொள்ளும் மேற்கூறிய நடவடிக்கை சந்தைப் பொருளாதார விதிகளைத் தெளிவாக மீறியுள்ளது. ஆகவே, அமெரிக்காவிலும் பல பொருளாதாரத் துறை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உலகில் 2ஆவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து வெளியேறுவது தவறான நடவடிக்கையாகும் என்று அமெரிக்க தேசிய சில்லறை விற்பனை கூட்டமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் தொழில் நடத்துவதன் மூலம் வெளிநாட்டுச் சந்தையை விரிவாக்கியுள்ளதுடன் அமெரிக்காவிலுள்ள தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள், நுகர்வோர்கள் ஆகியோருக்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டது.

சீனாவிலுள்ள முதலீடு இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயந்துள்ளது. இரு நாடுகள் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்று அமெரிக்கத் தேசிய வணிகச் சந்கம் தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்