வர்த்தக ஆதிக்கத்துக்கு உறுதியாக பதிலடி கொடுப்போம்: சீனா

வாணி 2019-08-26 19:17:22
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பொருட்களின் மீது அமெரிக்கா ஒரு சார்பாக சுங்க வரியை அதிகரிப்பது தான், சீன-அமெரிக்க வர்த்தகச் சர்ச்சைக்கான காரணமாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். கடந்த சுமார் ஓராண்டில், அமெரிக்கா தனது விசுவாத்தைக் காட்டுவதில் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்ததுடன், சுங்க வரி அதிகரிப்பின் மூலம் சீனாவுக்கு நிர்ப்பந்தத்தையும் அளித்து வருகின்றது. இந்நிலையில் சீனா 3 சுற்று பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதேவேளையில், பிற நாடுகளின் மீது அமெரிக்காவின் செயலைப் பார்த்தால், சலுகை வர்த்தக நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியதற்குப் பதிலடியாக, இந்தியா ஜுன் 16ஆம் நாள் முதல் அமெரிக்காவின் 28 வகை பொருட்களின் மீது வரியை அதிகரிக்கத் துவங்கியது. ஐரோப்பாவுக்கான 3500 கோடி யுரோ மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களின் வரியை அதிகரிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியமும் அண்மையில் அறிவித்தது.

அமெரிக்காவின் மமதையான செயலால் உலகளவில் எதிர்ப்பையே அந்நாடு ஈட்டியுள்ளது.

இன்றைய சீனா, வெளிப்புற அறைக்கூவல்களைச் சமாளிக்கக் கூடிய வலுவான ஆற்றல் கொண்ட தேசமாகும். அமெரிக்காவின் ஒரு சார்ப்பு ஆத்திரமூட்டலைச் சீனா வெற்றிகரமாகச் சமாளிப்பது உறுதியே.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்