வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் சீனச் சந்தை

வாணி 2019-08-28 20:14:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் முதல் பாதியில், சீனாவில் அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை 680 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இத்தொகை கடந்த இரு ஆண்டுகளில் இருந்த சராசரி அளவை விட 1.5 விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனச் சந்தையில் தங்களது பங்கை விரிவாக்க வேண்டும் என்ற விருப்பத்தை இந்தத் தொழில் நிறுவனங்கள் தங்களது உண்மை நடைவடிக்கைகளின் மூலம் தெரிவித்துள்ளன.

நாடு கடந்த தொழில் நிறுவனங்களுக்கு சீனா முழுமையான தொடர் தொழில் சங்கிலியையும் விநியோகச் சங்கிலியையும் வழங்கி வருகின்றது. இது சீனாவில் இருக்கும் சாதகமான அமசமாகும்.

வெளிநாட்டுத் திறப்பு பற்றி அளித்த வாக்குறுதிகளைச் சீனா நடைமுறைப்படுத்தி வருவதுடன், வெளிநாட்டுத்தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வணிக வாய்ப்புகளையும் கொண்டு வருவது சுட்டிக்காட்டத் தகுந்தது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்