உலக இயற்கைப் பாதுகாப்புக்கான முன்மாதிரி

சரஸ்வதி 2019-09-05 11:25:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சின்காய்-திபெத் பீடபூமியின் வட கிழக்குப் பகுதியில் சின்காய் மாநிலம் அமைந்துள்ளது. யாங்சி ஆறு, மஞ்சள் ஆறு போன்றவற்றின் தோற்றுவாய் இடமாக இது விளங்குகிறது. ஓர் ஆண்டில் சீனாவின் நடுப்பகுதி மற்றும் கீழப் பகுதியில் அமைந்துள்ள 20 மாநிலங்கள், நகரங்கள் மற்றும் தென் கிழக்காசியாவில் சில நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தப் பீடபூமி நீர்மூலவளத்தை அளித்து வருகிறது. தேசியப் பூங்கா என்ற முக்கித்துவம் வாய்ந்த இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி முன்மாதிரி மாநிலமாகத் திகழ வேண்டும் என்ற முயற்சியில் இம்மாநிலம் ஈடுபட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்குள், சர்வதேசத் தகுநிலை வாய்ந்த உலக இயற்கைப் பாதுகாப்பு முன்மாதிரி மண்டலத்தைக் கட்டியமைக்க இம்மாநிலம் திட்டமிட்டுள்ளது என்று சின்காய் மாநிலத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் செப்டம்பர் திங்கள் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சின்காய் மாநிலம், மஞ்சள் மண் பீடபூமி மற்றும் சின்காய்-திபெத் பீடபூமி இணையும் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாநிலம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4058 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு மக்கள் தொகை குறைவு. தனிச்சிறப்பு வாய்ந்த காட்சிகள் அதிகம். சீனாவில் தேசியளவில் முதலாவது தொகுதியில் அமைக்கப்படும் 10 தேசிய பூங்கா சோதனை மண்டலங்களில் 2 சின்காய் மாநிலத்தில் அமைந்துள்ளன. உயிரினச் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, உயர் தரமுள்ள வளர்ச்சியை விரைவுபடுத்தி, சிறந்த தரம் கொண்ட வாழ்க்கையைப் படைக்கும் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டத்தை இம்மாநிலம் விரைவுபடுத்தும். அதேவேளையில், தேசியப் பூங்கா கட்டமைப்பில் தொழில் நுட்பம், மனித வள மூலவளம் முதலியவற்றில், சின்காய் மாநிலம் முக்கியத்துவம் அளிக்கும் என்று செப்டம்பர் திங்கள் 4ஆம் நாள், சின்காய் மாநிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வாங் ச்சியென் சுன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தேசியப் பூங்காவை முக்கியமாகக் கொண்ட இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தைக் கட்டியமைக்கும் நடைமுறையாக்கத்தின் மூலம், இம்மாநிலம் அதிகமான பயன்களைப் பெற்று வருகிறது. தற்போது, இம்மாநிலத்தில் இயற்கைப் பாதுகாப்பு இடங்களின் எண்ணிக்கை 217 ஆகும். மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலப் பரப்பின் அளவு சீனத் தேசியளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது காடுகளின் பரப்பளவு, தேசியளவில் 15.3 விழுக்காடு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், இம்மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 17.7 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்து வருகிறது. சுற்றுலா வருமானம், ஆண்டுக்கு சராசரியாக 25 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்